இலங்கை ஊடகங்களில் செய்தி துருவப்படுத்தல் போக்குகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை மையப்படுத்திய ஆய்வு
இலங்கை ஊடகங்களில் செய்தி துருவப்படுத்தல் போக்குகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரணியை மையப்படுத்திய ஆய்வு அருள்கார்க்கி பல்லின நாடொன்றாக இலங்கை வரலாறு நெடுகிலும் பல கசப்பான அனுபவங்களை கொண்டுள்ளது. இனங்களுக்கிடையிலான குரோதங்கள், மொழிகளுக்கிடையிலான சமத்துவமின்மை, மத ரீதியான பாகுபாடுகள், கலாசார நம்பிக்கை அடிப்படையிலான புரிதல்களின் போதாமை என்பன ஒருமித்த நாடாக இலங்கை உருவாவதை சவாலுக்குட்படுத்தும் கருத்தியல்களாகும். இவ்வாறான பிரிவினைச் சிந்தனைகளுக்கு மக்களை இசைவாக்கம் அடையச் செய்திருப்பதில் பல்வேறு அகக்காரணிகளும், புறக்காரணிகளும் ஒவ்வொரு இனத்துக்குள்ளேயும் காணப்படுகின்றன. அரசியல், சமூக ரீதியாக பல்வேறு புறக்காரணிகள் காணப்படும் அதேவேளை இனங்களின் போக்குகளையும் நடத்தையையும் தீர்மானிக்கும் அகக்காரணிகள் பெரிதும் விரிவடைந்துள்ளன. சமூக ஊடகங்களின் வியாபகம், நுகர்வுக் கலாசாரம் என்பனவும் மக்களின் சிந்தனையை தாம் விரும்பும் திசைக்கு திருப்பக்கூடிய வகையில் பல்வேறு உத்திகளை கையாள்கின்றன. அதில் முக்கியமானது ஊடகங்கள் எவ்வாறு செய்திகளுக்கூடாக மக்களை துருவப்படுத்துகின்றன என்பது. காரணம்...