Skip to main content

Posts

Showing posts from November, 2021

மாகாண சபையும் உள்ளூராட்சியும் அவசியமும் விமர்சனமும்

  மாகாண சபையும் உள்ளூராட்சியும் அவசியமும் விமர்சனமும் அருள்கார்க்கி. அதிகாரப்பரவலாக்கத்தின் ஆரம்பகட்டமே இலங்கை போன்ற பல்லின நாடுகளில் பாரிய விமர்சனங்களுக்குள்ளானது. இலங்கையில் வாழும் அனைத்து இன, மத, மொழிப் பிரிவினரையும் கருத்தியல் ரீதியாக ஒன்றிணைக்கும் முயற்சிகள் இன்றுவரை சாத்தியப்படாத ஒரு சூழலில் அதற்கான முயற்சிகள் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தேசிய ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் இலங்கையின் இனப்பிரச்சினையானது இலங்கைத் தமிழர்களுக்கும், சிங்களவர்களுக்கும் இடையிலானதாகவே கட்டமைக்கப்பட்டுள்ளது. இதில் மலையக மக்கள் குறித்த தேசிய கவனம் செலுத்தப்படாமையும் அம்மக்களின் அரசியல், சமூக, பொருளாதார, பண்பாட்டு உரிமைகள் குறித்த சட்டரீதியான முன்னெடுப்புகள் குறித்தும் இதுவரை எவ்வித பொறிமுறையும் வகுக்கப்படவில்லை. நாட்டுக்குள்ளேயே அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாகவும், அரசியல், தொழிற்சங்க ரீதியாக சுரண்டப்பட்டு கொண்டிருக்கும் ஒரு தேசிய இனமாகவும் மலையக சமூகத்தை இன்றும் அடையாளப்படுத்தலாம்.  காலனித்துவ ஆட்சியாளர்களின் காலத்திலிருந்து பெருந்தோட்ட மக்களின் அரசியல் அபிலாசை...

மலையக மாணவர்களின் உயர்கல்விக்கு தேசிய நிதியம் அவசியம்

 மலையக மாணவர்களின் உயர்கல்விக்கு தேசிய நிதியம் அவசியம்                                   அருள்கார்க்கி. மலையக மக்களின் இனவிகிதாசாரம் கடுமையாக குறைந்துள்ள இச்சூழலில் அரசியல், சமூக ரீதியில் பல்வேறு சவால்களை சமகாலத்தில் நாம் சந்திக்க வேண்டியுள்ளது. உலகளாவிய ரீதியில் எழுச்சிப் பெற்றுவரும் அறிவுப் பொருளாதாரத்தில் இலங்கையும் குறிப்பிடத்தக்க அளவு தாக்கம் செலுத்துகின்றமை 21 ஆம் Áற்றாண்டின் நடுப்பகுதியிலேயே அவதானிக்கப்பட்டது. அந்தவகையில் சமகாலத்தில் அறிவுப்பொருளாதாரம் இலங்கையில் பிரதான அபிவிருத்தியாக மாறியிருக்கின்றது. கல்வி அபிவிருத்தியை பிரதான கதாபாத்திரமாகக் கொண்டு தேசிய உற்பத்தித் திறனை அளவிடும் குறிகாட்டிகள் இதனை தெளிவாக வரையறை செய்கின்றன. கல்விமுறை மாற்றம், இணையத்தின் அசுர வளர்ச்சி, நுகர்வுக் கலாசாரம் என்பன அறிவுப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு பிரதான பங்கு வகிக்கின்றன. ஒரு அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இலங்கையும் இவ்விடயங்களில் பாரிய மாற்றங்களை சந்தித்துள்ளது. இது இவ்வாறிருக்க இலங்கையில் நிலைமை பற்...

ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெருந்தோட்ட யுவதிகளின் மீது அண்மைக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட வெறுப்புப் பேச்சுக்களும் அதன் பின்னணிக் காரணிகளும்

  ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெருந்தோட்ட யுவதிகளின் மீது அண்மைக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட வெறுப்புப் பேச்சுக்களும் அதன் பின்னணிக் காரணிகளும்                                                                       அருள்கார்க்கி இலங்கையின் பெருந்தோட்ட துறையானது காலனித்துவ ஆட்சியாளர்களால் 1820 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட தொழிலாளர்களினால் உருவாக்கப்பட்டதாகும். சொற்ப சலுகைகளுக்காக ஏமாற்றப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட இத் தொழிலாளர்களின் எவ்வித அடிப்படை உரிமைகளும் காலனித்துவவாதிகளால் வழங்கப்படவில்லை. கீழ்மட்ட வாழ்க்கைத்தரம், குறைந்த ஊதியம், சுரண்டல் போன்றவற்றால் பெருந்தோட்ட மக்கள் இன்றும் அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு ரீதியாக இதுவரை எவ்வித குறிப்பிடத்தக்க அம்சங்களும் பதிவு செய்யப்பட வில்லை. அதிலும் முக்கியமாக இவ்வாறு பெருந்தோட்ட தொழில்துறைய...

பெண்கள் - கொரோனா - சமூகம். 'பெண்களுக்கு கொரோனா" பெண்களை மேலும் பலவீனப்படுத்தியது!

  பெண்கள் - கொரோனா - சமூகம். 'பெண்களுக்கு கொரோனா"  பெண்களை மேலும் பலவீனப்படுத்தியது!                                                                       அருள்கார்க்கி '4 வருசமா கொழும்பில காமென்ட் இலதான் வேலை  செஞ்சேன். அம்மா, அப்பா தோட்டத்திலதான் வேலை செய்றாங்க. குடும்ப கஸ்ரத்தை போக்கதான் நான் கொழும்புக்கு வேலைக்கு போனன். இப்ப அங்க கொரோனா வந்ததால இங்க வந்தன். என்னோட யாரும் பேசுறாங்க இல்ல...என்னய கண்டாலே தள்ளிபோறாங்க. ஏண்ட 'பிறன்சும்' என்னோட கதைக்கிறாங்க இல்ல." என்கிறார். பதுளை, ஹாலிஎல பிரதேசத்தைச் சேர்ந்த மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (24). கொழும்பில் கொரோனா காரணமாக காமென்ட் மூடியதால் மூன்று  மாதங்கள் விடுதியில் தங்கியிருந்தவர் தனது சொந்த ஊருக்கு திரும்பியபோது அவர் எதிர்கொண்ட பிரச்சினை அவருக்கு மன உளைச்சலைக் கொடுத்துள்ளது. சாதாரணமாகவே பெண்கள் என்றாலே இரண்டாம்பட்சமாக நோக்கும் இந்த சமூகம், அந...

இரசாயன உரத்தடை – சில கேள்விகள்

  இரசாயன உரத்தடை – சில கேள்விகள் அருள்கார்க்கி. நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் இரசாயன உரங்களை முற்றிலுமாக தடை செய்ய அரசாங்கம் அண்மையில் முடிவெடுத்திருந்தது. இவ்விடயமானது பயிர்ச்செய்கையில் ஈடுபடும் சமூகங்களின் பரவலான விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள இச்சூழலில், இது குறித்தான கருத்தாடல்கள் முக்கியத்துவம் மிக்கதாகின்றன. இதுவரைக் காலமும் நெல், மரக்கறி உள்ளிட்டவற்றுக்கும் தேயிலை, தென்னை, இறப்பர் முதலான பெருந்தோட்ட பயிர்ச்செய்கைகளுக்கும் இரசாயன உரமே பயன்படுத்தப்பட்டு வந்தன. இவற்றின் மூலம் விவசாயிகள் உள்நாட்டு உற்பத்திகளான நெல், மரக்கறி மற்றும் பழவகை என்பவற்றை உள்நாட்டு, வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் குறிப்பிட்டளவு உற்பத்திகளை செய்யக் கூடியதாக இருந்தது. இரசாயன உரங்கள் மற்றும் மருந்துகளால் விளைச்சல் அதிகமாகவும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது. ஆனால் இன்று சடுதியாக அரசாங்கம் இரசாயன உரங்களை தடை செய்யும் தீர்மானமானது விவசாய சமூகங்களின் மத்தியில் உருவாக்கியுள்ள வினாக்களை ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.  இதுவரைக் காலம் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட இரசாயன உரங்களை தடை செய்வதற்கு அரசாங...

மலையகத்தில் சுகாதார சேவைகளில் பாரபட்சம் ஒரு மனிதவுரிமை நோக்கு

  மலையகத்தில் சுகாதார சேவைகளில் பாரபட்சம் ஒரு மனிதவுரிமை நோக்கு  அருள்கார்க்கி காலனித்துவ ஆட்சிக் காலப்பகுதியில் மலையக மக்களின் சுகாதார நிலைமைகளில் ஏற்பட்ட சில முன்னேற்றங்கள் சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலங்களில் கட்டம் கட்டமாக வீழ்ச்சி அடையத் தொடங்கின. மலையக சுகாதார சேவைகளின் இன்றைய நிலைக்கு அடிப்படையாக அமைந்த இந்த காலப்பகுதியானது இந்திய வம்சாவளி தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமை பாதிக்கப்பட்டதன் பின்னர் இவர்களது சுகாதார தேவைகளை தேசிய திட்டங்களில் உள்வாங்கப்படுவதற்கு முடியாத ஒரு நிலைமை உருவாவதற்கான காலமாகும். இந்நிலைமை இன்று இவர்கள் அனுபவிக்கும் சுகாதார நிலைகளின் அடைவு வீழ்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததாகும். இது இந்நாட்டில் வாக்குரிமை கிடைக்கப்பெற்ற பின்னரும் கூட மலையக மக்கள் கல்வி, சுகாதாரம் ஆகிய அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதற்கு தடையாக அமைந்த காரணிகளாகும். ஏனைய இனங்களோடு ஒப்பிடுகையில் இன்னும் மோசமான சுகாதார சேவைகளை மலையக மக்களே அனுபவிக்கின்றனர்.  1930 களில் இலங்கையின் பெரும்பான்மை மக்கள் பிரதேசங்களை விடவும் ஒப்பீட்டளவில் சிறந்த சுகாதார சேவைகளை உடையவர்களாக பெருந்தோட்ட மக்கள...

அரசு - சட்டம் - சமூகம் மலையக மக்களை நோக்கி வெறுப்பு பேச்சுக்கள்! எப்போது நிறுத்தப்படும்?

அரசு - சட்டம் - சமூகம் மலையக மக்களை நோக்கி வெறுப்பு பேச்சுக்கள்! எப்போது  நிறுத்தப்படும்?                                                அருள்கார்க்கி “மலையகத்தான் பற்றி பேசேக்க அவங்க தமிழ் கலாசாரம் தெரியாதவங்க. வரலாறு இல்லாதவங்க, அவையள தமிழ் இனத்துக்குள்ள சேக்க ஏலாது. மோசமான பழக்கவழக்கமுடையவங்க....." இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஐரோப்பிய நாடொன்றில் வசிக்கும் நபரொருவரால் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட காணொளியில் பேசப்பட்ட விடயங்களே இவை. இதை விடவும் மேசமான வார்த்தைகளால் மலைகய மக்களை இழித்துரைத்திருந்தார் அந்த நபர். அவர் தான் யார், தனது éர்வீகம், பின்னணி என்ன என்று வெளிப்படையாக குறிப்பிட்டு இவ்வாறு தன் மொழி பேசும் இன்னொரு சமூகத்தின் மீது வெறுப்புப் பேச்சுகளை முன்வைத்திருந்தார். இவர் வடக்கை சேர்ந்த ஒரு சாதாரண பிரஜை.  அடுத்து ஒரு மக்கள் பிரதிநிதி, கிழக்கிலங்கையைச் சேர்ந்தவர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நேரலை ஒலிபரப்பின்போது மலையக மக்களை மிகவும் கீழ்த்தரமான வார்...