Skip to main content

ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெருந்தோட்ட யுவதிகளின் மீது அண்மைக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட வெறுப்புப் பேச்சுக்களும் அதன் பின்னணிக் காரணிகளும்

 ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெருந்தோட்ட யுவதிகளின் மீது அண்மைக்காலத்தில் வெளிப்படுத்தப்பட்ட வெறுப்புப் பேச்சுக்களும் அதன் பின்னணிக் காரணிகளும்


                                                                      அருள்கார்க்கி


இலங்கையின் பெருந்தோட்ட துறையானது காலனித்துவ ஆட்சியாளர்களால் 1820 ஆம் ஆண்டு குடியேற்றப்பட்ட தொழிலாளர்களினால் உருவாக்கப்பட்டதாகும். சொற்ப சலுகைகளுக்காக ஏமாற்றப்பட்டு இலங்கையில் குடியமர்த்தப்பட்ட இத் தொழிலாளர்களின் எவ்வித அடிப்படை உரிமைகளும் காலனித்துவவாதிகளால் வழங்கப்படவில்லை. கீழ்மட்ட வாழ்க்கைத்தரம், குறைந்த ஊதியம், சுரண்டல் போன்றவற்றால் பெருந்தோட்ட மக்கள் இன்றும் அடக்குமுறைக்குள் உள்ளாக்கப்பட்டுள்ளனர். பெருந்தோட்ட மக்களின் சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டு ரீதியாக இதுவரை எவ்வித குறிப்பிடத்தக்க அம்சங்களும் பதிவு செய்யப்பட வில்லை. அதிலும் முக்கியமாக இவ்வாறு பெருந்தோட்ட தொழில்துறையில் அங்கம் வகிக்கும் 50 மூ சதவீதத்துக்கும் அதிகமானோர் பெண்களாவர். எனவே அவர்களின் சமூக நகர்வுகள் குறித்து இவ்வாய்வு முக்கியத்துவம் வாய்ந்ததாகின்றது. 


நாடு சுதந்திரமடைந்ததன் பின்னர் பெருந்தோட்டங்கள் தனியார் மயமாகின. தனியார் துறையினரின் இலாப நோக்கத்துடன் கூடிய சிந்தனை போக்கினால் மலையக பெருந்தோட்ட தொழில்துறை முகாமைத்துவம் சுரண்டல் மிகுந்ததாக மாறியது. இந்நிலைமையும் 1992 இல் ஏற்பட்ட தனியார் துறையினரின் தொழில் கொள்கைகளில் மாற்றமும் பெருந்தோட்ட பெண்களை தோட்ட தொழில் சாராத ஏனைய தொழில்களின் பக்கம் நகரத்Àண்டியது. இவ்வாறு  ஏனைய வாய்ப்புகளை தேடிய பெருந்தோட்ட பெண்களுக்கு நாட்டின் மற்றைய கைத்தொழில் துறையான ஆடை உற்பத்தி துறையும், தொழிற்சாலைகளும் தொழில் வழங்கக் கூடிய சந்தர்ப்பம் இருந்தது. 



இவ்வாறு பெருந்தோட்டங்களுக்கு வெளியில் தொழில் புரியும் பெண்களின் தொழில் உரிமைகள் எவ்வளவு உத்தரவாதமளிக்கப்பட்டன என்பது தொடர்பாக மதிப்பீடு செய்யும் ஆய்வுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக அபிவிருத்தியில் பெரும் பங்கு வகிக்கும் கைத்தொழில் துறையை ஒரு முறைசாரா தொழிலாகவே கணிப்பிட வேண்டியுள்ளது. ஏற்கனவே பெருந்தோட்ட வாழ்க்கை முறையில் காணப்பட்ட சமூக அந்தஸ்;து இன்மை பெண்களை ஏனைய தொழில்துறைகளுக்கு நகரச் செய்திருந்தாலும் அங்கும் அவர்களின் சமூக அந்தஸ்து குறிப்பிடத்தக்க அளவில் வழங்கப்படவில்லை. மாறாக அவர்களை கீழான கண்ணோட்டததுடன் அவதானிக்கும் சமூக மனப்பான்மையே உருவாகியுள்ளது. 


இவ்வாறான சமூக பின்புலத்துடன் கூடிய தொழிலை இவர்கள் புரிந்து வந்த காலப்பகுதியில் கொவிட் - 19 தாக்கம் பரவலடைய ஆரம்பித்தது. அதன் இரண்டாவது அலை ஆடைத்தொழிற்சாலைகளில் பரவியதன் காரணமாக அவர்கள் மீதான சமூக அபிப்பிராயம் வெறுப்புப் பேச்சுக்களாக வெளிப்பட ஆரம்பித்தது. இவ்வாறான வெறுப்பு பேச்சுகள் காலங்காலமாக முன்வைக்கப்பட்டு வந்திருந்தாலும் கூட சமகாலத்தில் அது அப்பெண்களின் உளவியல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும் வகையில் பொது வெளியில் பகிரப்பட்டு வருகின்றமை துரதி~;டவசமானதாகும்.  


பெருந்தோட்ட தொழிலுக்கு மேலதிகமாக ஏனைய தொழில்துறைகளில் அங்கம் வகிக்கும் பெண்களில் தங்கியே பெரும்பாலான மலையகக் குடும்பங்கள் இருக்கின்றன. இவ்வாறு குடும்பத்துக்கான பொருளாதார ஆதாரமாக இருக்கும் பெண்களை சமூக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பெரிதும் பாதிக்கக்கூடிய வெறுப்புப் பேச்சுக்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தப் படுவதன் காரணமாக அவர்கள் மீண்டும் அவ்வாறான தொழிலுக்கு செல்வதற்கு தயக்கம் கொண்டுள்ளனர். குறைவான கல்வித்தகைமைகள், அதிகமான காலத்தை தேர்ச்சி அடைய முடியாத தொழிற்துறைகளில் முதலீடு செய்தமை உள்ளிட்ட காரணங்களால் இவர்களின் எதிர்கால தொழில்சார் வாய்ப்புக்கள் கேள்விக்குறியாகியமை அனுபவங்களின் ஊடாக அறிய முடிகின்றது.  


பொதுவாகவே ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட பாரிய தொழிற்துறைகள் தனியாரின் முதலீடுகளில் தான் இயங்குகின்றன. இங்கு சர்வதேச தொழில் நியமங்களோ, உள்ளுர் தொழில் நியமங்களோ பின்பற்றப்படுவதில்லை. இதன் காரணமாக இங்கு பணிபுரியும் பெண்களின் உளவியல் ஆற்றுப்படுத்தல்கள், உரிமை மீறலின் போது அதற்கான நியாயம் என்பன கேள்விக்குறியாகியுள்ளன. இவற்றுக்கு மேலதிகமாக நிறுவனத்துக்குள் உழைப்புச் சுரண்டல், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள், அடக்குமுறை என்பன காணப்படுகின்றமையை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களான பெண்கள் உறுதிப்படுத்துகின்றனர். 


இவ்வகையான வெறுப்புப் பேச்சுகள் மலையகப் பெண்களை விசேடமாக திட்டமிட்டு பரப்பப்படுவதற்கு பல பின்புலங்கள் இருக்கின்றன. லயன் வாழ்க்கை முறை, ஏனைய சமூகங்களை போன்று நாட்டின் அடிப்படை உரிமைகள் கிடைக்கப் பெறாமை, குறைவான கல்வித் தகைமைகள் என்பன இவற்றுக்கான பிரதான காரணங்களாகும். பிரதானமாக ஒரு சிறுபான்மைச் சமூகமாக உள்ள படியால் இவர்கள் மீது உதாசினமான மனப்பான்மை ஏனைய இனங்களில் இருந்தும், சொந்த இனத்துக்குள்ளிருந்தும் வெளிப்படுத்தப்படுகின்றது. பல்வேறு கலாசாரங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் யுவதிகள் தொழில் செய்தாலும் மலையக யுவதிகளின் தோற்றம், பின்புலம் என்பவற்றை குறிப்பிட்டு வெறுக்கத்தக்க வகையில் பேசுவது பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம்பெற்றுள்ளது. 


இவ்விடயங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட யுவதியொருவரிடம் வினவப்பட்டது. அதன்போது அவர் கொழும்பை அண்மித்த பிரதேசமொன்றில் அமையப் பெற்றுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் கடந்த 4 வருடங்களாக பணியாற்றியுள்ளார். அங்கு பணிபுரிந்த காலத்தில் தற்காலிகத் தொழிலாளியாகவே கடமையாற்றியுள்ளார். ஆடைத் தொழிற்சாலைகளை பொருத்தவரையில் குறிப்பிட்ட ஒரு பாகத்தை மாத்திரமே ஒருவர் செய்ய வேண்டும். எனவே முழுமையான அனுபவம் கிடைப்பதில்லை. அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆரம்பக்காலங்களில் இவர்கள் தேர்ச்சியடைந்த தொழிலாளர்களாக இணைத்துக் கொள்ளப்படுவதில்லை. எனவே இவர்கள் தவறு செய்யும் சந்தர்ப்பங்களில் பெரும்பான்மையின மேற்பார்வையாளர்கள் சிங்கள மொழியில் வசை பாடியுள்ளனர். இவர்களுக்கும் சிங்கள மொழியில் பரிட்சயம் இல்லாத காரணத்தால் அவை புரியாதுள்ளது. இவ்வாறான சந்தர்ப்பங்களில் இனத்துவ ரீதியான தாக்குதல்களை இவர்கள் எதிர் கொண்டுள்ளனர். தம்முடன் பணியாற்றும் ஏனைய இன யுவதிகளிடமும் இவர்களுக்கு இரண்டாம் பட்சமான இடம் தான் கிடைக்கப் பெற்றுள்ளது. குறிப்பிட்ட யுவதி அப்பிரதேசத்தில் தங்குமிடங்களை பெற்றுக்கொள்ள முனைந்த போதும் கூட மலையகம் என்றவுடன் பெரும்பான்மை இனத்தினர் மத்தியில் உதாசினமான உரையாடல்களே வெளிப்படுத்தப்பட்டதாக கூறுகின்றனர். அதேப்போல் இதனை ஒரு அங்கீகாரமான தொழிலாக சமூகத்தில் வெளிப்படையாக கூற முடியாதுள்ளதாகவும் வருத்தம் தெரிவித்தார். 


இவ்வாறான வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக சர்வதேச தொழிற்துறை சம்மேளனத்தின் மத்தியக்குழு உறுப்பினரும், சுதந்திர வர்த்தக வலய தொழில் மற்றும் பொதுச்சேவை தொழிற்சங்கத்தின் இணைந்த செயலாளருமான (Executive Commitee Member at Industrial Global Union, Joint secretary at Free Trade zones and General service Employees Union) திரு. என்டன் மார்க்கஸ் அவர்களிடம் கருத்துக்கள் ஆராயப்பட்டது. அவர் தெரிவித்த விடயங்களாவன நாட்டின் கைத்தொழில் துறையே இன்று பிரதானமான மொத்த தேசிய உற்பத்தியாகும். ஆயினும் தனியார் முதலீட்டாளர்களே இன்று கைத்தொழில் துறையை முகாமைத்துவம் செய்கின்றனர். எனினும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் இந்நாட்டின் பிரஜைகள் என்ற வகையில் அவர்களுக்கான அடிப்படை உரிமைகள் மற்றும் சுய கௌரவம் பேணப்பட வேண்டும். அரசாங்கம் என்ற ரீதியில் அந்த கடமையை அவர்கள் சரியாகச் செய்யாத காரணத்தினால் இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங் கொடுக்கின்றனர். 


முக்கியமாக சுதந்திர வர்த்தக வலயம் உள்ளிட்டவற்றில் சேவையாற்றும் மலையக யுவதிகள் Àரப்பிரதேசங்களில் இருந்தே வருகைத் தருகின்றனர். வாடகை வீடுகளில் தங்கி தொழில் புரியும் இவர்கள் பெரும்பான்மை மக்கள் மத்தியில் இரண்டாம் பட்சமாகவே கவனிக்கப்படுகின்றனர். தனியார் தங்குமிடங்;களிலும் இவர்கள் தவறான நோக்கங்களுடன் அணுகப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. இதற்கு காரணம் இவர்களின் தொழில் சார்ந்து இவர்களை மதிப்பிடுவதும், தவறான சமூக அபிப்பிராயம் காலங்காலமாக வேரூன்றியுள்ளதுமாகும்.

இவர்கள் தொழில் புரியும் பிரதேசங்களில் இவர்களுக்கான வாக்குரிமை இல்லை. எனவே இவர்களின் நலனிலோ, அல்லது உரிமை சார்ந்த விடயங்களிலோ பிரதேச அரசியல்வாதிகள் கரிசனை கொள்வதில்லை. இவர்களின் சொந்த பிரதேசங்களிலும் இவர்களுக்கான உரிய அங்கீகாரம் இல்லாத காரணத்தினால் இவர்கள் ஒரு ஓரங்கட்டப்பட்ட குழுவினராகவே உள்ளனர். இவையும் இவர்கள் மீதான வெறுப்பு பேச்சுகள் சமூகத்தில் தோன்றுவதற்குக் காரணங்களாகும்.


அதேப்போல் இவ்வாறான ஆடைத்தொழிற்சாலைகள், இராணுவ முகாம்களுக்கு அருகிலிருப்பதும் ஒரு சமூக பிரச்சினையை தோற்றுவித்துள்ளது. குடும்ப வறுமை, தொழிலின்மை போன்ற பல்வேறு காரணங்களுக்காக இலகுவாகக் கிடைக்கக்கூடிய தொழிற்சாலைகளுக்கு இவர்கள் வருகின்றனர். இங்குள்ள சூழல் இவர்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. எனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் இவ் யுவதிகள் து~;பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுகின்றனர். அந்த விடயங்களை முறையிடுவதற்கு உள்ள தயக்கம், போதிய வலுëட்டலின்மை போன்ற  காரணங்களினால் இவ்வாறான விடயங்கள் மறைக்கப்படுகின்றன. அதேபோல் இங்கு தொழில்புரியும் ஊழியர்களின் புத்துணர்ச்சிக்காக அவ்வப்போது இசை நிகழ்ச்சிகள் என்பன நடாத்தப்படுவதுண்டு. அவ்வாறான சந்தர்ப்பங்களில் இவர்களின் மீது து~;பிரயோகங்கள் இடம் பெற்றுள்ளமையும் கவனிக்கத்தக்கது. இவ்விடயங்களில் மலையக யுவதிகள் மட்டுமன்றி அனைத்து சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் இதற்கு முகங் கொடுத்துள்ளனர். 


ஏதேச்சதிகார சமூக கட்டமைப்பில் சிறுபான்மை இனமொன்றின் பிரஜைகளாக அனைத்து துறைகளிலும் பல்வேறு அவÀறுப் பேச்சுகளை இவர்கள் சந்தித்தாலும் தொழில் ரீதியாக சமூக கட்டமைப்பை ஏற்படுத்தி அதில் கீழ்மட்டத்தில் உள்ளவர்களை வெறுக்கத்தக்க வகையில் கையாள்வது இலங்கையில் மட்டுமன்றி தெற்காசியாவிலும் ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இவர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகள் ஒரு கட்டத்தில் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளாக மாற்றமடைகின்றன. எனவே திட்டமிட்ட வன்முறைகளின் ஆரம்பப் புள்ளியாக நாம் வெறுப்புப் பேச்சுகளை அடையாளம் கண்டு களைவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். 

இலங்கையில் 75 மூ வீதமான பெண்களுக்கு சுயகௌரவம் என்பது தொழில் ரீதியாக வழங்கப்படுவதில்லை. கல்வியை பாதியில் இடைநிறுத்தும் இவர்களில் பெரும்பாலானோர் நகர்ப்புற கைத்தொழில் தொழிற்சாலைகளையே தொழிலுக்காக நாடுகின்றனர். பெருந்தோட்ட பிரதேசங்களை போல் நாட்டின் ஏனைய பின் தங்கிய கிராமப் புறங்களில் உள்ள யுவதிகளும் இவ்வாறே. இளவயதில் இவ்வாறான தொழிலுக்கு வரும் இவர்களின் உழைப்புச் சுரண்டல் இடம்பெறுகின்றது. இவர்களை தற்காலிகமாகவே இணைத்துக்கொண்டு பின்னர் பிறிதொரு குழுவை உள்வாங்குகின்றனர். மலையகத்தை போன்று வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் இருந்து வரும் தொழிலாளர்களும் சிறுபான்மை மனப்பான்மையுடனே நடாத்தப்படுகின்றனர். 


மலையகப் பிரதேசங்களில் இருந்து வரும் யுவதிகளுக்கு மொழி தெரியாத பிரச்சினையும் உள்ளது. துபிரயோகங்களின் போது இவர்களுக்கு குரல்கொடுக்க முடியாத நிலை தோன்றுகின்றது. தொழிற்சாலைகளில் பணியாற்றும் முகாமைத்துவ ஊழியர்கள் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாக இருப்பதன் காரணமாக இவர்களின் பிரச்சினைகள் வெளிச்சமூகத்துக்கு தெரிய வருவதில்லை. முக்கியமாக இவர்கள் இரண்டு விதமான அடக்குமுறைகளை அனுபவிக்கின்;றனர். முதலாவது இவர்கள் பெண்கள் இரண்டாவது இவர்கள் தமிழ்ப்பெண்கள். ஏனையோருடன் ஒப்பிடும் போது இவர்கள் அவர்களை விடவும் விடவும் மோசமான வெறுக்கத்தக்க அனுபவங்களை கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்களுடனான எமது கலந்துரையாடல்களின் போது இவ்வியடங்கள் வெளிப்பட்டுள்ளன. 


இவற்றுக்கான தீர்வுகளாக திரு. என்டன் மார்க்கஸ் அவர்கள் சில முன் மொழிவுகளை வழங்குகின்றார். இதில் பிரதானமானது இவர்கள் இயக்கமாதல் ஆகும். ஒன்றிணைந்து இவ்வாறான சவால்களுக்கு முகங் கொடுப்பதற்கு ஊடாக சமூக அதிர்வுகளை ஏற்படுத்த முடியும். நாட்டில் வெளிப்படையாகவே இனவாத வெறுப்பு பேச்சுகள் பகிரப்படுகின்றன. அவற்றை இவர்கள் இன, மத, பாகுபாடின்றி ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். முக்கியமாக சிறுபான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களுக்கும் சவில் அமைப்புகளுக்கும் இங்கு பாரிய பொறுப்பு உள்ளது. 

இவ்வாறான வெறுப்பு பேச்சுகள் தொடர்பாக மலையக பெண்களை திறனுட்படுத்தும் அமைப்பின் தலைவி (President -  Movement to Empower Women in the Plantation, MEWIP) திருமதி.தேவகி இராஜகோபால் அவர்களிடம் வினவப்பட்டது. அவரின் கருத்துப்படி மலையகம் இயல்பாகவே இதன் வரலாற்றுப் பின்புலத்தின் காரணமாக பரிகசிக்கப்பட்டு பல்வேறு கால கட்டங்களிலும் உட்பட்டது. இன வன்முறை, உழைப்புச் சுரண்டல், தோட்ட நிர்வாகங்களின் ஏதேச்சதிகாரம் என்பவற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக மலையகப் பெண்கள் மீது கடுமையான அழுத்தங்களும் அவÀறுகளும் வரலாற்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பகிரப்பட்டிருக்கின்றன. 


இதன் தொடர்ச்சியாக பெருந்தோட்டத்துக்கு வெளியில் சுதந்திர வர்த்தக வலயங்களிலும், ஆடைத்தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் மலையக இளம்பெண்கள் மீது அண்மையில் வெளிப்படுத்தப்பட்ட வெறுக்கத்தக்க சமூக கண்ணோட்டங்களாகும். பெருந்தோட்டங்களில் உள்ளே காணப்படும் குறைந்த வேதனம், சிரமம் என்பவற்றின் காரணமாக பெருநகரங்களை அண்டிய தொழிற்சாலைகளுக்கு பணிக்குச் செல்கின்றனர். அங்கு தொழில் புரிவதில் உள்ள கவர்ச்சி ரீதியான ஆர்வத்தின் காரணமாக அண்மைக்காலங்களில் அதிகமான மலையக இளைஞர், யுவதிகள் இவ்வாறான தொழில்களுக்கு சென்றுள்ளனர். ஆனால் இந்நிலைமை ஆரோக்கியமான சமூகத்தையோ பொருளாதார அபிவிருத்தியையோ கொண்டு வரவில்லை. மாறாக எமது சிறுபான்மை சமூகத்துக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்களையும், வன்முறையையும் கொண்டு வந்துள்ளது. 


பலமான தொழிற்சங்க கட்டமைப்பு ஒன்றினூடாக இவர்கள் ஐக்கியமாதல் வேண்டும். அவ்வாறு இடம்பெறும் பட்சத்தில் உரிமை சார்ந்து பல்வேறு அடைவுகளை எட்டமுடியும். ஒரு தனிநபர் வெறுக்கத்தக்க வகையில் சமூகத்தில் பரிகாசம் செய்யப்படும் போது அது பெரிதாக அதிர்வுகளை 

ஏற்படுத்துவதில்லை. எனினும் அவர் ஒரு தொழிற்சங்கத்தை சார்ந்திருந்தால் வெறுப்புப் பேச்சு பகிரங்கமாக வெளிப்படுத்தப்படும் போது அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எமது ஒருங்கிணைந்த தொழிற்சங்கம் அவ்வாறான பல்வேறு சந்தர்ப்பங்களை எதிர் கொண்டுள்ளது. (Gendral Base Violence) என்று சொல்லக் கூடிய பாலியல் சார் வன்முறைகளுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடமுடியும். அதேப்போல் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஆலோசனை, மற்றும் ஆற்றுப்படுத்தல் சேவைகளும் அவசியமாகும் என்று குறிப்பிட்டார். 


மேலும் பெருந்தோட்ட பிரதேசங்களில் பாரம்பரிய தொழிற்சங்கங்கள் காணப்படுகின்றன. இவை அம்மக்களின் உரிமை சார்ந்த விடயங்களை சமூகமயப்படுத்துவதற்கு வழங்கிய பங்களிப்புக்கள் போதாது. அச்சமூகங்களில் இருந்து தொழிற்துறைக்கு வெளியில் வரும் ஏனைய தொழிலாளர்களை ஒருங்கிணைக்க வேண்டி உள்ளது. அவர்களுக்கான பயிற்சிகள், நீதித்துறை வழிகாட்டல்கள், மறுவாழ்வு முயற்சிகள் என்பன வழங்குவதற்கான முயற்சிகளை எமது ஒன்றிணைந்த தொழிற்சங்கம் மேற்கொள்கின்றது. இதற்கூடாக வெறுப்பு பேச்சு கலாசாரத்தை மாற்றியமைக்க முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.


பொருளாதார ரீதியான எமது பின்னடைவே எமது சமூகம் சந்திக்கும் அனைத்து அச்சுறுத்தல்களுக்கும் பிரதான காரணமாகும். பெருந்தோட்ட மக்கள் 200 வருட காலம் தோட்டத்துறைகளில் தொழில் செய்தாலும் அவர்களுக்கான வேதனம், முதல், அடிப்படை உரிமைகள் வரை எவையுமே தன்னிறைவு அடையவில்லை. அதேப்போல் தான் கைத்தொழில் துறைகளில் தொழில் புரியும் மலையக யுவதிகளும் உழைப்புச் சுரண்டலுக்கும் வெறுப்புப் பேச்சுகளுக்கும் ஆளாகின்றனர். இதற்கு காரணம் நாம் ஒரு சிறுபான்மைச் சமூகமாக இருப்பதுடன் ஏனைய இனங்களுக்கு சமமான வாழ்க்கைத்தரத்தை அடையவில்லை. எமது சமூகத்துக்கான அங்கீகாரம் எனப்படுவது தனிப்பட்ட அந்தஸ்துடன் தொடர்புடையது. அந்தவகையில் நாம் இன்றுவரை மலையகப் பெண்களின் சமூக வகிபாகத்தையும் அபிவிருத்தியில் அவர்களின் பங்களிப்பையும் சரியாக இனம் காணவில்லை.


ஆடைத்தொழிற்சாலைகளை எடுத்துக் கொண்டால் பெண்களே 80 மூ சதவீதத்துக்கும் அதிகமாக பணி புரிகின்றனர். மலையகப் பெண்களும் இவ்வெண்ணிக்கையில் கணிசமாக உள்ளனர். தொழில் சூழலில் காணப்படும் ஆணாதிக்க போக்கு இவ்வாறான ஆடைத்தொழிற்சாலைகளில் தலை விரித்தாடுகின்றது. பொதுவாகவே இவ்வகையான தொழிற்சாலைகளில் ஆண்களே முகாமைத்துவ பணிகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் பெண் ஊழியர்களை தமது விருப்பத்துக்கு ஏற்றாற்போல் பயன் படுத்த முடியும் என்று நினைக்கின்றனர். குறிப்பாக தமிழ் யுவதிகள் இங்கு சந்திக்கும் உடலியல், உளவியல் துன்புறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றனர். 


அண்மையில் கொவிட் இரண்டாவது அலையில் ஆடைதடதொழிற்சாலை ஒன்றில் பெண் ஊழியருக்கு தொற்றியிருந்தது. அதன்போது அவருடன் தொடர்புபட்டவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டது. அதன்போது இன்னும் அதிகமான முகாமைத்துவ ஊழியர்களுக்கும் பணியாளர்களுக்கும் தொற்றியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விடயத்தை பெரிதுபடுத்தி ஆடைத்தொழிற்சாலை பெண் பணியாளர்களின் நடத்தை தொடரடபாக வெறுக்கத்தக்க வகையில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டன. ஒரு அரச நிறுவனத்திலோ, அல்லது அலுவலகத்திலோ இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றிருந்தால் அதன் போக்கை யாரும் விமர்சிக்க மாட்டார்கள். எனினும் ஆடைத்தொழிற்சாலை என்றவுடன் விரைவாக பெண் பணியாளர்களின் நடத்தை விமர்சிக்கப்பட்டது. ஓட்டுமொத்தமாக பெண்கள் மீது இவ்வகையான குற்றச்சாட்டுகள் எழுந்தாலும் மலையகப் பெண்களும் இதில் குறிப்பிடத்தக்களவு பாதிக்கப்பட்டனர். சமூகத்தில் ஏற்கனவே புரையோடிப் போயிருந்த இவர்களுக்கான அங்கீகாரமின்மை மீள நிறுவப்பட்டது போன்று உணரப்பட்டது. இது ஒரு ஆபத்தான நடைமுறையாகும். எமது யுவதிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாவதோடு அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் இதனால் பாதிக்கப்படுகின்றது. எவ்வித ஆதாரமுமின்றி பொதுப்புத்தியுடன் சமூகம் இதனை எதிர்கொள்வதும், ஏற்றுக்கொள்வதும் அவர்களை தனிமைப்படுத்தும் விடயங்களாகும். 


பாதிக்கப்பட்ட ஆடைத்தொழிற்சாலை யுவதி ஒருவரை நான் ஆற்றுப்படுத்தியுள்ளேன். (Counsiling) அவரின் அனுபவங்களை இங்கு பகிர்ந்துப் கொள்வதும்  பிரயோசனமாக இருக்கும் என்று நினைக்கிறேன். குறித்த யுவதி அப்புத்தளை பிரதேசத்தைச் சேர்ந்தவர். கொழும்பிலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றிய  இவர் அண்மையில் அங்கிருந்து வெளியேறியுள்ளார். இவரின் அனுபவங்களுக்கூடாக தமிழ் யுவதிகள் மீது கடுமையான வசைப்பாடல்கள் நிறுவனத்திற்குள் இடம்பெற்றிருக்கின்றன. இவர்களுக்கு சிங்களமொழி தெரியாத காரணத்தினால் பல்வேறு சந்தர்ப்பங்களில் Àசன வார்த்தைகளால் மேற்பார்வையாளர் வசை பாடியுள்ளார். ஒரு சமயம் குறித்த யுவதி அதற்கெதிராக குரல் கொடுத்தப்போது அவர் பழிவாங்கப்பட்டுள்ளார். க~;டமான பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இவ்விடயங்கள் எமது யுவதிகளுக்கு தொழிற்சாலைகளில் உள்ள பாதுகாப்பின்மையையே வெளிப்படுத்துகின்றன. இதற்கெதிராக குரல் கொடுக்க வேண்டிய வெகுசன சமூகம் மேலும் அவர்களை இழிவாகப் பார்ப்பது மிகவும் வருந்தத்தக்கது. இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. தமது இளவயதுக் காலங்களை இவ்வாறான தொழிற்துறைகளில் முதலிடும் இவர்கள் தேர்ச்சியடையாத (Unstill) தொழிலாளர் படையாகவே தொடர்ந்தும் இருக்கின்றனர். எனவே இவர்கள் ஆடைத்தொழிற்சாலை அனுபவங்களை கொண்டு இவர்கள் பிறிதொரு தொழில் தேட முடியாத நிலைமையும் காணப்படுகின்றது என்றுக் கூறினார்.


மேலும் இவர்கள் ஏனைய சமூகங்களை போல சுயகௌரவத்துடன் வாழ்வதற்கு பல்வேறு உட்கூறுகளை நாங்கள் அபிவிருத்திச் செய்ய வேண்டிள்ளது. குறிப்பாக் இவர்களின் பாடசாலைக் கல்வியை வலுëட்டுவதும், தொழிற்பயிற்சிகளை வழங்குவதும் அவசியம். மலையக பெண்களை திறனுட்படுத்தும் அமைப்பு (MEWIP) இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஆற்றுப்படுத்தல் சேவைகளை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார். எனினும் இவை பாதிக்கப்பட்டோர சார்ந்தது. வெகுசன சமூகம் இவர்களை பார்க்கும் வெறுப்புப் பார்வையை மாற்றுவதற்கு சற்று சிரமமாக உள்ளதாக தெரிவித்தார்.


இவ்வாறான வெறுப்புப் பேச்சுகள் ஒரு சிலரின் நடத்தையின் காரணமாக இடம்பெறும் சந்தர்ப்பங்களும் உள்ளன என்பதை ஏற்றுக் கொள்கின்றார். அதேசமயம் அது ஒட்டுமொத்த ஊழியர்களையும் பாதிக்கின்றது. அது அவர்களின் எதிர்கால வாழ்க்கையை பெரிதும் பாதிக்கின்றது. திருமண பேச்சுகள், ஏனைய தொழில்களுக்கு செல்லுதல் போன்ற சந்தர்ப்பங்களில் இவர்கள் மிகவும் வெறுக்கத்தக்க வகையில் உதாசினப்படுத்துகின்றனர். சில நேரங்களில் அவர்களின் விரக்தி மனநிலை, தற்கொலை போன்ற எண்ணங்களுக்கும் Àண்டுகின்றது. நாட்டின் முக்கியமான தொழிற்துறையான கைத்தொழில் துறையை இயக்குபவர்களான பெண்களின் சமூக நிலைமை இவ்வாறிருப்பது மிகவும் மோசமானது எனத் தெரிவித்தார். 


கைத்தொழில் பேட்டைகள் கொழும்பிற்கு வெளியில் அமைப்பதÇடாகவும் இத்தொழில் முறையை முறைமைப்படுத்துவதும் ஆரம்பகட்ட தீர்வுகளாகும். அவ்வாறமைந்தால் பெருந்தோட்டங்களை அண்டியுள்ள பிரதேசத்தை சேர்ந்தோர் வீட்டிலிருந்து தொழிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புக்கள் ஏற்படும். இதன் மூலம் பெரும்பாலான பிரச்சினைகள் குறைவடையும் சமூக மட்டத்திலும் இவர்களுக்கான சிறிய அங்கீகாரம் கிடைக்கப்பெறும். அதேப்போல் தொழில் பாதுகாப்பை உறுதிபடுத்துவதும் அரச தலையீட்டுடன் கூடிய உரிமைகள் பேணல் இடம்பெறுவதும் அவசியம். 


முக்கியமாக சிறுபான்மை இனங்களுக்கெதிரான வெறுப்புப் பேச்சுகளை இல்லாதொழிப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் அவசியம். அது அனைத்து இனங்களையும் சம அந்தஸ்துடன் நடாத்தும் அரசு அமையப்பெற வேண்டும். சிறுபான்மை சமூகங்களின் பாதுகாப்புக்கும் உரிமைக்கும் கடுமையான சட்டங்களை உருவாக்க வேண்டும். இனங்களுக்கிடையிலான ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள் திட்டமிட்டு முன்னெடுக்கப்படுகின்றது. அரசியல் லாபங்களுக்காக சமூகங்களை கூறுபோட்டு வைத்துள்ளனர். கீழ்மட்ட சமூகங்களுக்கிடையில் வெறுப்புப் பேச்சுகளும், வன்மங்களும் தோற்றம் பெற்றுள்ளமைக்கு அரசியல் காரணங்களே பிரதானமானவை. குறிப்பாக எல்லா சமூகங்களிலும் பெண்களின் நடத்தையையே அச்சமூகங்களுக்கு எதிரான ஆயுதமாக பாவிக்கின்றனர். இதற்கு பெருந்தோட்டமும் விதிவிலக்கல்ல எனத் தெரிவித்தார்.

அதேப்போன்று இவ்வாறான வெறுப்புப் பேச்சுகள் தொடர்பாக 20 வருடங்கள் பெண்ணுரிமை செயற்பாடுகளில் அனுபவம் கொண்டவரான திருமதி. நளினி ரட்ணராஜா அவர்களிடம் வினவப்பட்டது. இதன் போது அவர் தெரிவித்த விடயங்களாவன வெறுப்புப் பேச்சு என்பது இன்று பரவலடைந்து வரும் ஒரு வன்முறையாகும். இலங்கையிலும் கிழக்காசிய நாடுகளிலும் தொழில் ரீதியாக பல்வேறு வகைப்பாடுகள் இருக்கின்றன. படித்தவர்கள் மேலானவர்கள் என்றும், உடலுழைப்பை முதலிடுபவர்கள் கீழ்மட்டத்தினர் என்றும கருத்தோட்டம் உள்ளது. ஆயினும் பெருந்தோட்டத்துறை மற்றும் கைத்தொழில் துறை ஆகியனவே நாட்டின் பொருளாதாரத் Àண்களாக இருக்கின்றன. அதிலும் அதிகமாக பெண்களே பணியாளர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான அடிப்படை தொழிலுரிமைகளோ அல்லது சுயகௌரவமோ இல்லை. மாறாக வெறுக்கத்தக்க விதமான சமூகப் புரிதல்களே உள்ளன. 


குறிப்பாக அண்மையில் கொவிட் பரவலை தொடர்ந்து ஆடைத்தொழிற்சாலை மற்றும் மத்தியகிழக்கு பணியாளர்கள் சொல்லெணாத் துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆடைத்தொழிற்சாலைகளில் கொவிட் இரண்டாம் அலை பரவத் தொடங்கியதும் இவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டது நாம் அறிந்ததே. இத்தொழிற்துறை முறை சாராதிருப்பதும் இவ்வாறான வெறுப்புப் பேச்சுகள் தோன்றுவதற்கு ஏதுவாக உள்ளன என்று குறிப்பிட்டார். இவ்விடயங்களை பகுப்பாய்வு செய்து பார்க்குமிடத்து பெருந்தோட்ட பெண்கள் ஆடைத்தொழிற்துறையில் குறிப்பிடத்தக்க வெறுப்பு பேச்சுகளையும், உடலியல், உளவியல் வன்முறைகளையும் எதிர் கொண்டுள்ளனர். இதனை ஒரு சமூக கலந்துரையாடலாக ஆரம்பித்து நேர்கணிய பெறுபேறுகளை நோக்கி நகர வேண்டும். வெறுப்புப் பேச்சு கலாசாரமானது பல்லின சமூகங்கள் வாழும் நாடுகளுக்கு அவற்றின் அபிவிருத்தியிலும், உட்கட்டமைப்பிலும் பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றமை ஆய்வாளர்களால் பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டப்படுகின்றது. குறிப்பாக பெண்கள் தொடர்பான வெறுப்பு பேச்சுகளுக்கும், வன்முறைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய காலத்தில் இருக்கின்றோம். 

 

1948 ஆம் ஆண்டின் சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம். 

1966 ஆம் ஆண்டின் பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாசார உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை. 

பெண்கள் மீதான பாகுபாட்டினை ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை.

சர்வதேச தொழிலாளர் தாபனத்தின் தொழில் உரிமைகளுக்கான உடன்படிக்கைகள். 

சர்வதேச தொழில் நியமங்கள். 

1958 ஆம் ஆண்டின் பால்சார்ந்த தொழில் பாகுபாட்டை தடை செய்வதற்கான உடன்படிக்கை.

போன்ற சட்டங்களுக்கமைவாக தொழில்துறை நிறுவனங்கள் தமது பெண் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

முறை சாரா தொழில்துறைகளில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் தொழிலுரிமை சார்ந்த விடயங்களில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பல்வேறு ஆய்வுகள் இதனை உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறான சட்டங்கள் இறுக்கமாக்கப்படுவதுடன் இவர்களின் சுயகௌரவம் பாதுகாக்கப்படக்கூடிய வகையில் இத்தொழிற்துறைகளை டுறைமைப்படுத்த வேண்டும் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். அதேபோல் பெருந்தோட்ட வாழ்ககை முறையை குறிப்பிட்டு இவர்களை பாகுபாட்டுக்கு உட்படுத்துவது மோசமான நிலைமையாகும். எனவே ஏனைய சமூகங்களை போன்று மலையக சமூகமும் சுய கௌரவத்துடன் வாழ்வதற்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினரும் அழுத்தம் கொடுக்கின்றனர். இவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்க பிரதிநிதிகளின் கருத்துக்களின் படி தோட்டங்களுக்கு வெளியில் தொழில் புரியும் பெண்கள் தொழிற்சங்க கட்டமைப்புக்குள் வருவதும், தமது உரிமைகள் மீறப்படும் சந்தர்ப்பங்களில் நீதித்துறையை நாடுவதும், அதனை சமூகத்துக்கு வெளிக்கொணர்வதÇடாக வெகுசன போராட்டங்களை Àண்டுவதும் அவசியமாகும் என்பதாக உள்ளது. இதன் மூலம் வெறுப்புப் பேச்சுக்களை கணிசமான அளவு குறைக்கலாம் என்பத அவர்களின் அபிப்பிராயமாகும்.     


           


Comments

Popular posts from this blog

Prisoners in Sri Lanka and Their Struggles for Rights

Prisoners in Sri Lanka and Their Struggles for Rights. By Arul Karki A  Abstract This research  focuses on addressing the issues and rights of prisoners in Sri Lanka. It further examines other challenges comprising the penal framework in the country including issues like; recurrent trend of overcrowding, resource constraints, high levels of poverty, poor standards of minimum housing, health and other rehabilitation services. Additionally, it seeks to understand the legal regime on prisoners’ rights in Sri Lanka and whether or not these rights exist in practice. In addressing some of the key areas of the plight of prisoners in Sri Lanka, this article embarks on trying to underscore the feel for reforms and improvements in the country’s penal system. Introduction:D The prison system in Sri Lanka has for a long time had undesirable challenges which have negative consequences on the patterns of life of those serving sentences. Just like any other country’s prisoners, incarcerated ...

Impact of Climate Change on Horton Plains National Park in Sri Lanka

Impact of Climate Change on Horton Plains National Park in Sri Lanka. By Arul karki   Introduction: Horton Plains National Park, located in the central highlands of Sri Lanka, is a biodiversity hotspot renowned for its unique ecosystems and diverse wildlife. The park encompasses a range of habitats, from montane cloud forests to grasslands, making it a critical conservation area. However, like many regions around the world, Horton Plains is not immune to the effects of climate change. This article will delve into the impacts of climate change on Horton Plains National Park in Sri Lanka. 1. Changes in Temperature: One of the most evident impacts of climate change on Horton Plains is the rising temperatures. Studies have shown that temperatures in the region have been steadily increasing over the past few decades, leading to shifts in the park's ecosystems. Higher temperatures can disrupt the delicate balance of flora and fauna in the park, affecting everything from plant growth to a...

A Memorable Experience at the Bandarawela Archimedes International School Innovation Expo 2025 By Arulkarki

A Memorable Experience at the Bandarawela Archimedes International School Innovation Expo 2025 By Arulkarki          In my recent visit to the Bandarawela Archimedes International School, I had the distinct honor of being a special guest at the Innovation Expo 2025. This event, dedicated to fostering creativity and showcasing innovative projects developed by students, was not only a platform for young minds to express their ideas but also a celebration of ingenuity and academic excellence. Upon arriving at the school, I was immediately struck by the vibrant energy that permeated the grounds. The atmosphere buzzed with excitement as students prepared their exhibits and presentations. It was clear that significant effort had gone into planning and executing this event, and I was eager to see the fruits of their labor. As I toured the various displays, I was genuinely impressed by the diversity of projects on offer. Students from different age groups presented thei...