Skip to main content

கொரோனாவும் மன உளைச்சலும் - அருள்கார்க்கி

 கொரோனாவும் மன உளைச்சலும்


அருள்கார்க்கி





சீனாவில் கொவிட் - 19 தாக்கம் ஆரம்பித்த காலப்பகுதியில் எமக்கெல்லாம் அது ஒரு வெற்று செய்தி மட்டுமே. அதேப்போல் ஒரு வெளிநாட்டு செய்தி. உலகில் எங்கோ ஓர் மூலையில் இடம்பெறும் ஒரு அசாதாரண சம்பவம் எம்மை எந்த வகையிலும் பாதிக்காது என நாம் எண்ணுவதுண்டு. ஒரு சில சமயங்களில் அச்சம்பவங்களுடன் எம்மால் ஒருவர் தொடர்பு பட்டிருந்தால் அது எம்மை சற்று பாதிக்கும் ஒரு செய்தியாக அமையும். எமக்கு சற்றும் தொடர்பில்லாத சம்பவங்களை நாம் ஒரு போதும் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. எனினும் சில சமயங்களில் அவ்வாறான ஒரு சம்பவம் எமது நாளாந்த வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் ஒரு சந்தர்ப்பமும் ஏற்படும். சில வேளைகளில் சற்று காலம் தாமதித்து அவ்வாறு இடம்பெறலாம். ஆனால் கொரோனா வைரஸ் தாக்கமானது குறுகிய காலத்தில் ஒட்டுமொத்த உலகையும் கடுமையாக பாதித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை போலவே இந்த நெருக்கடியால் உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் மக்களின் அன்றாட நடத்தைக்கோலமும் கடுமையான மாறுதல்களை சந்தித்துள்ளது. ஊரடங்கு உத்தரவுஇ தனிமைப்படுத்தப்படல்இ மருத்துவ உபதேசங்கள்இ சுகாதார வாழ்க்கை முறைஇ கொரோனா மரணங்கள்இ அதில் பாதிக்கப்பட்டவர்களின் நிலைஇ பொருளாதாரம் என்பன போன்ற இன்னோரன்ன கருத்து நிலைகளால் ஒவ்வொருவரும் மன ரீதி;யாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம். இதுவரை எமது வாழ்நாளில் நாம் சந்தித்திராத ஒரு நெருக்கடியான காலப்பகுதியாக இதனைக் கருதலாம்.

கொரோனா தாக்கம் பற்றிய செய்திகளுக்கு புறம்பாக அதன் காரணமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் சமூக நடத்தையையும் நாம் அதிகமாக அவதானம்  செலுத்த வேண்டும். அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் அடிப்படை தேவைகளுக்கான வளங்களே குறைவாக காணப்படுவதன் நிமித்தம் பொருளாதாரஇ சமூக ரீதியாக பல்வேறு பிறழ்வான நடத்தைகளை கொண்டவர்கள் உருவாகக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன.


உள ஆரோக்கியம்

பொதுவான உளவியல் சார் ஆரோக்கியம் அதிகளவாக பாதிக்கப்பட்ட ஒரு நெருக்கடியாக இதனை நாம் கொள்ளலாம். ஊரடங்கு வாழ்க்கை (ஊரசகநற டகைந) என்பது இலங்கையை பொறுத்தவரையில் இவ்வாறான ஒரு நீண்டகால தன்மையை நாம் இதுவரை அனுபவித்ததில்லை. இலங்கையர்களை பொறுத்தவரையில் உற்பத்தித் துறையை விடவும் அதிகமான பணியாளர்கள் அரச மற்றும் தனியார் துறையிலேயே பணியாளர்களாக உள்ளனர். எனவே விடுமுறைக் காலத்தை அவ்வாறு கழிப்பது என்பது தொடர்பாக விளக்கமின்மையால் அவர்களால் விடுமுறையை ஒரு தண்டனையாக உணர்கின்றனர். எனவே வீட்டுக்குள் மட்டுமே விடுமுறைக்கு அனுமதி எனும் போது அது கொடுமையானதாக அமைகிறது. எனவே அவர்கள் உள ஆரோக்கியத்தை கணிசமாக இழந்துள்ளனர். இதன் காரணமாக வீட்டு மட்டத்திலும் சமூக மட்டத்திலும் பல்வேறு அசம்பாவிதங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அண்மையில் மலையகத்தில் இடம்பெற்ற தற்கொலை முயற்சிகளை நாம் அறிந்த உதாரணமாக கூறலாம். உலகளவில் இதுபோன்று பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. 

கொரோனாவுடன் நேரடியாக தொடர்புபட்ட மரணங்களை போலவே கொரோனா ஏற்படுத்திய மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டவர்களும் உள்ளனர். வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்களும் இதில் அடங்குகின்றனர். கல்வி மட்டம்இ வாழ்க்கை முறைமை என்பவற்றைத் தாண்டி அனைத்து தரப்பினரையும் இது சமாந்தரமாக பாதித்துள்ளது. கடந்த வாரம் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினாலும் அவர்களால் சடுதியாக உளவியல் ரீதியாக மீள முடியவில்லை என சர்வதேச ஆய்வு நிறுவனம் ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. இது எமது சமூகங்களுக்கும் கிட்டிய ஒரு விடயமாகும். பாடசாலை மாணவர்கள்இ பல்கலைகழக மாணவர்கள் உள்ளிட்ட இளவயதினரும் அரசஇ தனியார் துறையில் பணியாற்றிய இடைப்பட்ட வயதினரும் வீட்டிலிருப்பதை ஒரு அளவுக்கு மேல் விரும்பவில்லை. பயணக்கட்டுப்பாடுகள்இ சமூக இடைவெளி என்பவை அனைவரையும் வீட்டிற்குள் சிறைப்படுத்தியதால் அவர்கள் தமது மன உணர்வுகளை அண்மையில் உள்ளோர் மீது திணிப்பதற்கும் அது சாத்தியமாகாத நிலையில் கோபம்இ வெறுப்புஇ அதிருப்தி போன்ற உணர்வுகளுக்கு அடிமையாகியுள்ளனர்.   


Comments

Popular posts from this blog

Prisoners in Sri Lanka and Their Struggles for Rights

Prisoners in Sri Lanka and Their Struggles for Rights. By Arul Karki A  Abstract This research  focuses on addressing the issues and rights of prisoners in Sri Lanka. It further examines other challenges comprising the penal framework in the country including issues like; recurrent trend of overcrowding, resource constraints, high levels of poverty, poor standards of minimum housing, health and other rehabilitation services. Additionally, it seeks to understand the legal regime on prisoners’ rights in Sri Lanka and whether or not these rights exist in practice. In addressing some of the key areas of the plight of prisoners in Sri Lanka, this article embarks on trying to underscore the feel for reforms and improvements in the country’s penal system. Introduction:D The prison system in Sri Lanka has for a long time had undesirable challenges which have negative consequences on the patterns of life of those serving sentences. Just like any other country’s prisoners, incarcerated ...

A Memorable Experience at the Bandarawela Archimedes International School Innovation Expo 2025 By Arulkarki

A Memorable Experience at the Bandarawela Archimedes International School Innovation Expo 2025 By Arulkarki          In my recent visit to the Bandarawela Archimedes International School, I had the distinct honor of being a special guest at the Innovation Expo 2025. This event, dedicated to fostering creativity and showcasing innovative projects developed by students, was not only a platform for young minds to express their ideas but also a celebration of ingenuity and academic excellence. Upon arriving at the school, I was immediately struck by the vibrant energy that permeated the grounds. The atmosphere buzzed with excitement as students prepared their exhibits and presentations. It was clear that significant effort had gone into planning and executing this event, and I was eager to see the fruits of their labor. As I toured the various displays, I was genuinely impressed by the diversity of projects on offer. Students from different age groups presented thei...

Climate Change Impacts on Tea Plantations in Sri Lanka: An Economic and Social Analysis: by Arul Karki

  Climate Change Impacts on Tea Plantations in Sri Lanka: An Economic and Social Analysis by Arul karki       Tea has been a vital part of Sri Lanka's economy for centuries, with the country being one of the world's largest producers of tea. However, the impacts of climate change pose significant challenges to the sustainability of tea plantations in Sri Lanka. In this article, we will explore the economic and social implications of climate change on tea plantations in Sri Lanka, and discuss potential adaptive strategies to mitigate these impacts. Economic Impacts 1. Shifts in Tea Production Zones: Climate change is altering the traditional growing regions for tea in Sri Lanka. Rising temperatures and changing rainfall patterns are forcing tea plantations to seek higher altitudes or move to different regions to maintain optimal growing conditions. This shift incurs costs related to relocation, establishment of new plantations, and changes in infrastructure. 2. R...