Skip to main content

நவீன பயிற்சியற்ற ஆளணியினரின் கைகளில் தேயிலை தொழில்துறை -அருள்கார்க்கி-

            நவீன பயிற்சியற்ற ஆளணியினரின் கைகளில் 

                தேயிலை தொழில்துறை    

                                  -அருள்கார்க்கி-





   வர்த்தகம் எனப்படுவது ஒரு கூட்டுச் செயற்பாடு.சங்கிலித் தொடரான இதில் ஒவ்வொரு அங்கமும் திறம்பட செயலாற்ற வேண்டும்.கூட்டு முயற்சியின் போக்கில் ஒரு இடத்தில் தவறு நடந்தாலும் முழு வேலைத்திட்டமுமே பாழாகி விடும். அந்தவகையில் தேயிலை தொழில்துறையும் இலங்கையின் வர்த்தகத்தில் பெரும் பங்கை வகிக்கின்றமை நாம் அறிந்ததே.!

   சில்லறைக்கடை வியாபாரமாக இருந்தால் கூட அதனைக்கொண்டு நடத்துவதற்கு ஒரு முன்னனுபவமும் பயிற்சியும் அவசியம்.அது அவ்வாறிருக்க பெருந்தோட்டத்துறையானது பாரிய ஆளணியினரை கொண்டு இயங்கும் ஒரு விடயம்.கொழுந்து பறிப்பவர்களிலிருந்து நிர்வாகிகள் வரை இத்தொழில்துறை சம்பந்தமாக தமது நிலைக்கேற்றவாறான அறிவு மற்றும் அனுபவத்தை கொண்டிருக்க வேண்டும்.வெறுமனே கொழுந்தை கைக்கு வந்தவாறு பறித்து சேகரிப்பதும் முறையற்ற விதத்தில் களஞ்சியப்படுத்தி பதப்படுத்துவதும் தேயிலையின் தரத்தை குறைத்து விடும்.

   அதேபோல் நிர்வாக கட்டமைப்பிலும் அனைத்து அலகுகளும் அவர்களின் கடமைகளை தரமாகச் செய்தாலொழிய தரமான வெளியீட்டை எதிர்ப்பார்க்க முடியாது.ஆங்கிலேயர் தேயிலை தொழில்துறையை ஆரம்பித்து நடாத்திய போது கங்காணிமார் முறையை இந்நாட்டிற்கு அறிமுகப்படுத்தினர.; கங்காணிமார் பதவிகள் இன்றும் தோட்டங்களில் உள்ளன.கங்காணிமார் தேயிலையை பற்றி அறிந்து வைத்துள்ளவற்றை கூட இன்று தோட்ட துரைமார் அறியாதவர்களாக காணப்படுகின்றனர்.

வெறுமனே ஆங்கில அறிவையுமஇ; மோட்டார் சைக்கிள் செலுத்தக்கூடிய ஆளுமையையும் மட்டுமே நம்பி தேயிலை தோட்டத்துக்குள் காலடி எடுத்து வைத்த துரைமார் கூட்டத்தால் எதை சாதிக்க முடியும்? ஆரம்பகாலங்களில் புதிதாக வேலைக்கு இணையும் உதவி தோட்ட நிர்வாகிகளுக்கு ஒரு தேயிலை மலையை கொடுத்து அதில் சிறந்த விளைச்சலை உற்பத்தி செய்யவேண்டிய கடமையை பொறுப்பளிப்பார்கள்.


  இந்நடைமுறையின் மூலம் தேயிலை மலைகளும் புதுப்பிக்கப்படுவதோடு நிர்வாக அறிவும் மேம்படும்.தோட்டங்களில் வெளிக்கள உத்தியோகத்தர்கள் இணைத்துக் கொள்ளப்படுவதிலும்; இவ்வாறு 03 தொடக்கம் 09 மாதங்கள் தொடர்ச்சியான பயிற்சிகள் அளிக்கப்பட்டு சவாலான பொறுப்புக்களை அளித்;து அதனை மேற்பார்வை செய்தே அவர்களுக்கு நியமனம் வழங்குவது உண்டு.

  இன்றளவில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள விடயம் éதாகரமாகியுள்ள சூழ்நிலையில் தோட்டங்களில் விளைச்சல் அருகி வருவதும் தோட்டங்கள் காடாகி காட்சியளிப்பதும் ஒருபுறமும் தொழிலாளர்கள் போராட்டங்கள் மறுபுறமும் அரங்கேறிய வண்ணமுள்ளன.இச்சூழ்நிலையில் எம்மவர்களின் உழைப்பில் உருவான இத்தொழில்துறையை பாதுகாத்து உயிர்ப்பிக்க வேண்டிய கடமை எம் கைகளில் உள்ளது.அந்தவகையில் காலநிலை பருவமாற்றங்கள் போன்ற சூழலியல் காரணிகளால் தேயிலை பல்வேறு தாக்கங்களுக்கு உள்ளாகி வருகின்றமை இன்றளவில் பரவலான ஒரு விடயம்.

 

 தேயிலை மலைகளை புதுப்பிப்பதிலும் இன்று நிர்வாகங்கள் சிக்கனத்தை கடைப்பிடிக்கின்றன.மீள்நடுகை (சுநிடயவெ) செய்வதானது பாரிய மனித உழைப்பையும் மூலதனத்தையும் பயன்படுத்தி செய்யப்படுவதாகும் அதுமட்டுமன்றி மீள்நடுகை செய்யப்பட்ட மலைகளில் குறிப்பிட்ட காலப்பகுதிகளில் விளைச்சலை எதிர்ப்பார்க்கவும் முடியாது.இவற்றை காரணம் காட்டி மீள்நடுகையை நிர்வாகங்கள் புறக்கணிக்கின்றன.அதேப்போல் விளைச்சலை அதிகரிக்க எந்தவித நவீன யுக்திகளை கையாள்வதற்கான பயிற்சியும் முயற்சியும் நிர்வாகங்களுக்கோ வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கோ வழங்குவதில்லை.

 

 கென்யாஇசீனாஇபங்களாதேஸஇ;இந்தியா போன்ற தேயிலை உற்பத்தி செய்யும் நாடுகள் இன்று உயிரியல் விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற ஆளணியினரையே பயன்படுத்துகின்றன.அதேபோல் இந்நாடுகள் தேயிலை மலைகளிலிருந்து கொழுந்தை கொண்டு செல்வது முதல் ஏற்றுமதி செய்வது வரை மிகவும் உயரிய தொழிநுட்பத்தை பயன்படுத்துகின்றன.புதியனவாக இத்தொழிநுட்பத்தை கொண்டு வந்து இன்றளவில் முழுமையாக அதனை தேயிலைக்கு தனியிடத்தை பெற்றுவிட்டன.


  ஆரம்பகால தேயிலை மலைகளை சிறந்த முறையில் பராமரித்தார்கள். குறிப்பாக மலையில் நிழல் வழங்கவும் மண்ணரிப்பை தடுக்கவும் இலை உக்கல்களை பசளையாக பயன்படுத்தவும் கிரவேலியாஇஅல்பீசியாஇஅபேசியாஇ டெடெப்ஸ்இவெற்றிவேர்இகடலைப்புல் என்பவற்றை நட்டு வளர்ப்பது உண்டு.இயற்கையான முறையில் பராமரிப்பதற்கும் தேயிலையின் தரத்தை உயரிய முறையில் பேணவும் விசேடமாக பயிற்சி பெற்ற மேற்பார்வையாளர்களும் தொழிலாளர்களும் காணப்பட்டனர்.மலைகளில் வளரும் புற்களை கையால் பிடுங்குவதென்றால் ஹெக்டேயர் ஒன்றுக்கு 25-30 வேலையாள் வரை தேவைப்படும்.இந்த செலவை இழிவளவாக்க இரசாயன கிருமிநாசினிகளை பயன்படுத்துகின்றனர். வேலை இலகுவாகும் அதேநேரம் பச்சைத்தேயிலையின் தரமும் குறைவடைகின்றது. அதேபோல் ஆரம்பகாலங்களில் இயற்கை பசளை தயார் செய்து களஞ்சியப்படுத்தி பயன்படுத்தினார்கள்.இன்று இயற்கை பசளை உற்பத்தி அருகி விட்டது.காய்கறி தோட்டங்களுக்கே இயற்கை பசளை பாவிப்பதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டிய சூழ்நிலையை காலம் கையில் தந்துவிட்டது.

 

 தேயிலைத்தோட்டங்களில் வெளிக்கள உத்தியோகத்தர்களாகவும் தொழிற்சாலை மேற்பார்வையாளர்களாகவும் (குயஉவழசல ழககiஉநச)இ (வுநய அயமநச) சாதாரண தரம் உயர்தரம் கற்றுமுடித்தவர்களை இணைத்துக்கொள்கின்ற நடைமுறை உண்டு.இவர்களின் அடிப்படை கல்வி அறிவை மட்டுமே கொண்டு தேயிலை தொழில்துறையில் இணைத்துக்கொள்ளாமல் அது தொடர்பான விடயகற்கைகளை முடித்தப்பின் பயிற்சி அளித்து இணைத்துக் கொண்டால் அவர்களிடமிருந்து காத்திரமான சேவையை பெற்றுக்கொள்ள முடியும். 

   

பொதுவாக இன்று தேயிலையின் தரத்தை உயரியதாக காட்டுவதற்கு பல்வேறு கலப்படங்கள் செய்யப்படுவதுண்டு.நிறங்கள் வாசனைêட்டிகள் என்பவற்றை கலந்து தேயிலையின் தன்மையை மேம்படுத்துகின்றனர். இவ்வாறான நடைமுறைகளால் சந்தையில் தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்படுவதோடு தொழிலாளர்களும் உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்றி பாதிப்படைகின்றனர்.



 ;.இவ்வாறான விடயங்களை கணக்கில் எடுக்காமல் வெறுமனே தேயிலை தொழில்துறை நட்டத்தில் இயங்குவதாக ஒரு கூட்டமும் 1000 ரூபாய் பெற்றுத்தருகின்றோம் வென்றுத்தருகின்றோம் என்று ஒரு கூட்டமும் நிற்பதால் என்ன நடந்துவிடப்போகின்றது? இறுதியில் உழைக்கும் வர்க்கம் எல்லோரையும் நம்பி ஏமார்ந்ததோடு அல்லாமல் அவர்கள் வியர்வை சிந்தி உருவாக்கிய தேயிலை தொழில்துறையும் அழிவை நோக்கி செல்லும் என்பதில் ஐயமில்லை.




Comments

Popular posts from this blog

Prisoners in Sri Lanka and Their Struggles for Rights

Prisoners in Sri Lanka and Their Struggles for Rights. By Arul Karki A  Abstract This research  focuses on addressing the issues and rights of prisoners in Sri Lanka. It further examines other challenges comprising the penal framework in the country including issues like; recurrent trend of overcrowding, resource constraints, high levels of poverty, poor standards of minimum housing, health and other rehabilitation services. Additionally, it seeks to understand the legal regime on prisoners’ rights in Sri Lanka and whether or not these rights exist in practice. In addressing some of the key areas of the plight of prisoners in Sri Lanka, this article embarks on trying to underscore the feel for reforms and improvements in the country’s penal system. Introduction:D The prison system in Sri Lanka has for a long time had undesirable challenges which have negative consequences on the patterns of life of those serving sentences. Just like any other country’s prisoners, incarcerated ...

Impact of Climate Change on Horton Plains National Park in Sri Lanka

Impact of Climate Change on Horton Plains National Park in Sri Lanka. By Arul karki   Introduction: Horton Plains National Park, located in the central highlands of Sri Lanka, is a biodiversity hotspot renowned for its unique ecosystems and diverse wildlife. The park encompasses a range of habitats, from montane cloud forests to grasslands, making it a critical conservation area. However, like many regions around the world, Horton Plains is not immune to the effects of climate change. This article will delve into the impacts of climate change on Horton Plains National Park in Sri Lanka. 1. Changes in Temperature: One of the most evident impacts of climate change on Horton Plains is the rising temperatures. Studies have shown that temperatures in the region have been steadily increasing over the past few decades, leading to shifts in the park's ecosystems. Higher temperatures can disrupt the delicate balance of flora and fauna in the park, affecting everything from plant growth to a...

A Memorable Experience at the Bandarawela Archimedes International School Innovation Expo 2025 By Arulkarki

A Memorable Experience at the Bandarawela Archimedes International School Innovation Expo 2025 By Arulkarki          In my recent visit to the Bandarawela Archimedes International School, I had the distinct honor of being a special guest at the Innovation Expo 2025. This event, dedicated to fostering creativity and showcasing innovative projects developed by students, was not only a platform for young minds to express their ideas but also a celebration of ingenuity and academic excellence. Upon arriving at the school, I was immediately struck by the vibrant energy that permeated the grounds. The atmosphere buzzed with excitement as students prepared their exhibits and presentations. It was clear that significant effort had gone into planning and executing this event, and I was eager to see the fruits of their labor. As I toured the various displays, I was genuinely impressed by the diversity of projects on offer. Students from different age groups presented thei...