மலையகத்தின் அபிவிருத்தியில் பெண்களின் உரிமைகளும் கடமைகளும்
- அருள்கார்க்கி
அப்புத்தளை, கிளனனோர் பிரஜாசக்தி நிலையத்தில் அண்மையில் பெண்களுக்கான விசேட செயலமர்வு ஒன்று ஏற்பாடுச் செய்யப்பட்டிருந்தது.பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்ட நிலைய பொறுப்பாளர்களான திரு.லலித்காந்த மற்றும் திருமதி.தேவபிரகலதா ஆகியோரின் முயற்சியிலும் ஏற்பாட்டிலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்தச் செயலமர்வில் சுமார் 25 பெண்கள் பங்குபற்றி சிறப்பித்திருந்தார்கள்.'மலையகத்தின் அபிவிருத்தியில் பெண்களின் உரிமைகளும் கடமைகளும்"எனும் தொனிப்பொருளில் நிகழ்த்தப்பட்ட இச்செயலமர்வில் பெண்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தமை குறிப்பிட்டு கூறவேண்டும்.
இச்செயலமர்வில் வளவாளர்களாக கிராம அதிகாரி திரு. நிரன்ஞ்சன் மற்றும் பத்திரிக்கையாளர் அருள்கார்க்கி ஆகியோர் பங்குபற்றியிருந்தனர். திரு.நிரன்ஞ்சன் அவர்கள் தமது விரிவுரையில் 'சமூக மாற்றத்தில் மலையக பெண்களின் பங்களிப்பு"எனும் தொனி;ப்பொருளில் சிறப்பாக வடிவமைத்திருந்தார்.மேலும் எமது உணவுப்பழக்கம்,சமூக நோக்கம்,பேச்சு,தாய்மாரின் வகிபாகம் (குழந்தையின் கல்வி),முடிவெடுக்கும் ஆற்றல்,பால்நிலை சமத்துவம்,முன்னுதாரணங்களை ஆராய்தல் போன்ற கருத்தாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளக்கமளித்தார்.அத்துடன் சமூகத்தின் மேல்நோக்கிய அசைவியக்கத்துக்கு தேவையான ஆளுமை மிக்க குடும்பத்தின் அவசியம் குறித்தும் வலியுறுத்தப்பட்டது.
மேலும் பல்லூடக எறியியின் மூலம் நவீன தொழிநுட்பம் தொடர்பாகவும் மலையக பெண்களின் முன்னுள்ள சவால்கள் தொடர்பாகவும் அவற்றுக்குண்டான அறிவுéர்வமான அணுகுமுறைகளுக்கான விளக்கம் மேலதிகமாக வழங்கப்பட்டது. அத்துடன் பொதுசன ஊடகங்களில் பிரசன்னமாகும் போதான ஒழுக்க விழுமியங்கள்இபேச்சு என்பன எவ்வாறு அமைய வேண்டும் எனவும் விளக்கமளிக்கப்பட்டது. கடந்த கால அனுபவங்களை கொண்டு எதிர்காலத்தை வளமாக அமைத்துக்கொள்ள பெண்கள் தன்னளவில் நம்பிக்கை உடையவர்களாகவும்,சுயமரியாதையை பேணுபவர்களாகவும் இருக்க வேண்டியதன் அவசியமும் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
வளவாளர் அருள்கார்க்கி தனது விளக்கத்தினை 'உலகமயமாதலும் பெருந்தோட்டத்துறைப் பெண்களும்"எனும் தொன்ப்பொருளில் வடிவமைத்து வழங்கினார்.மேலும் éகோளமயமாதலின் நன்மைகள் தீமைகள் குறித்து ஆரம்பகட்ட விளக்கமளிப்பை தொடர்ந்து பெருந்தோட்டத்துறை பெண்களின் வாழ்வியல் கூறுகளில் தாக்கம் செலுத்தும் சமூகவியல் புறக்காரணிகள் அடையாளம் காணப்பட்டது. அதனை தொடர்ந்து அவற்றுக்குண்டான சாத்தியப்பாடான வழிமுறைகள் மூலம் தீர்வை நோக்கி நகரும் பொறிமுறையின் அவசியம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதேபோல் பெருந்தோட்டத்துறைப் பெண்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய சேமிப்புப் பழக்கம், வீண்விரயங்களை தவிர்த்தல், அரசியல் அறிவை வளர்த்துக்கொள்ளல் போன்ற விடயதானங்களின் அவசியம் குறித்து மேலதிகமாக விளக்கமளிக்கப்பட்டதுடன் பாலியல் சமத்துவம் தொடர்பாகவும் பங்குபற்றுணர்களின் கருத்துச் சேமிப்பைத் தொடர்ந்து கலந்துரையாடல் விரிவு பெற்றது.
மலையகத்தின் அடையாளமே உழைக்கும் பெண்களால் தான் இன்று உலகத்திற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. எனினும் பெருந்தோட்டத்துறைப் பெண்களின் வாழ்வியல் பெறுமானங்கள் இன்னும் வளர்ச்சி அடையாமல் காணப்படும் சமூக அவலம் அடுத்த தலைமுறைக்கும் தொடராமலிருக்க கல்விக்கு மேலதிகமான ஒரு வெற்றிடம் சமகாலத்தில் நிலவுகிறது.அதனை இட்டு நிரப்புவதற்கு தேவையான வழிகாட்டலையும், தன்னம்பிகையையும் அவர்களுக்கு வழங்கவேண்டியது மலையக மண்மீது பற்றுகொண்டவர்களின் தலையாய கடமையாகும்.எனவே இதுபோன்ற சுயாதீனமான அமர்வுகளும் கருத்தாடல்களும் அவசியம்.சமூகத்தின் மாற்றம் வார்த்தைகளாலன்றி செயலில் தங்கியுள்ளது.
Comments
Post a Comment