மலையக மக்களுக்கு பாதகமான காணி சட்டங்கள்.
அருள்கார்க்கி.
பெருந்தோட்ட தொழில்துறையானது 200 வருடங்களை நெருங்கும் இச்சந்தர்ப்பத்தில் மலையக சமூகம் குறித்தான பரந்துபட்ட ஆய்வுகளும் அவதானங்களும் செலுத்தப்பட வேண்டும். குறிப்பாக குடியமர்த்தப்பட்ட ஒரு இனக்குழு நாட்டின் பிரதான பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு காரணமாகியிருப்பது வரலாற்று ரீதியாக பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம் பெற்றுள்ளது. ஏற்றுமதி வருமானம், உள்நாட்டு கைத்தொழில்துறை என்பனவற்றை இயங்கலுக்கு உட்படுத்தும் ஒரு இனக்குழுவாகவும் காலத்துக்கு காலம் மாற்றம் காணும் அரசாங்கங்களின் தோற்றத்துக்கு ஏதுவான வாக்காளர் கூட்டமாகவும் மலையக சமூகம் உள்ளது. எனினும் அடிப்படை வாக்குரிமைகள் என்றவகையில் இதுவரை இந்நாட்டில் முழுமையான அங்கீகாரம் கிடைக்காத நிலையிலும், ஏனையோரில் தங்கி வாழும் ஒரு இனமாகவுமே வாழ்ந்து வருவது மிகவும் துரதி~;டமாகும். வரலாற்று ரீதியாகவும், பாரபட்சமான சட்டங்களுக்கூடாகவும் மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் இன்றுவரை மறுக்கப்படுகின்றன.
ஒரு நாட்டின் சிறுபான்மை இனங்கள் எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்களின் உரிமைகள் எவ்வாறு பகிரப்படல் வேண்டும் என்றும் பல்வேறு சர்வதேச சமவாயங்கள் சுட்டிக்காட்டுகின்றன. முக்கியமாக ஐக்கிய நாடுகள் சபையின் இலக்குகளில் பொருளாதார, சமூக, கலாசார அல்லது மனிதாபிமான நடத்தை மீதான சர்வதேச பிணக்குகளை தீர்ப்பதிலும், ஒத்துழைப்பு வழங்குவதிலும் இன, பால், மொழி, மத ரீதியான வேறுபாடுகள் இன்றி அடிப்படை சுதந்திரம் மற்றும் மனிதவுரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்கிறது. ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின் உறுப்புரை 1 (3) இன் படி சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப பாரபட்சங்களுக்கும் வேறுபாடுகளுக்கும் எதிரான சட்டங்கள் உண்டு. இதில் இலங்கையும் ஒரு உறுப்பு நாடு என்றவகையில் இச்சட்டங்களுக்கு கட்டுப்பட வேண்டும். எனினும் மலையக மக்களுக்கான காணி மற்றும் மொழி உரிமைகளில் இதுவரை பாரபட்சமே காட்டப்படுகின்றது. எனவே மலையக மக்களின் காணி உரிமை மறுப்பை ஒரு மனிதவுரிமை மீறலாகவே அணுக வேண்டியுள்ளது. மறுபுறம் வாக்குரிமை உள்ள இந்நாட்டின் அனைத்து அரச செயற்பாடுகளுக்கும் உட்படுகின்ற ஒரு இனத்துக்கு எவ்வாறு அவர்களின் அடிப்படை உரிமைகள் உதாசினம் செய்யப்படுகின்றன என்பதையும் விரிவாக ஆராய வேண்டும்.
மலையக மக்களின் காணி உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு பல்வேறு அரசியல் சிவில் அமைப்புக்;களால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எனினும் அவை ஒரு கட்டத்துக்கு மேல்; விரிவாக்கப்படவில்லை. அல்லது அரசியல் ரீதியாக கையாளப்பட்டு நிராகரிக்கப்படுகினறது. சிறுபான்மை இனங்கள் தொடர்பாக இலங்கையில் காலத்துக்கு காலம் தோற்றம் பெற்ற அரசுகள் அனைத்தும் இவ்வாறான போக்குகளையே கடைபிடித்துள்ளன.
மலையக மக்களின் காணி உரிமைகள் தொடர்பாக அரசியலமைப்பு ரீதியாகவே சர்வதேச சட்ட சமவாயங்களுக்கு ஊடாகவோ இதுவரை அணுகவில்லை என்பது எமது சமூகத்தின் பாரிய பின்னடைவு. முக்கியமாக 1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு 20 திருத்தங்களை கண்டிருந்தாலும் அதில் மலையக மக்களின் உரிமைகள் தொடர்பான திருத்தங்கள் உள்வாங்கப்பட வில்லை. அதிலும் காணி மற்றும் மொழி உரிமைகள் தொடர்பான சட்டங்களில் பெரும்பான்மை ஆளும் அரசுகள் மிகக் கவனமாகவே இருந்து வந்திருக்கின்றமை கூர்ந்து அவதானித்தால் தெளிவாகப் புலப்படும்.
தற்சமயம் மீண்டும் புதியதொரு அரசியலமைப்பு வரைபு கொண்டு வரப்பட்டு உள்ள நிலையில் அதிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எவையும் உள்ளடக்கப்படுமா என்பது சந்தேகம் தான். மறுபுறம் சர்வதேச சமவாயங்களுக்கு ஊடாகவும் மலையக சிறுபான்மை இனத்தின் உரிமைகள் தொடர்பான நகர்வுகள் முன்னேடுக்கப்படாமை ஒரு எமக்கு பாரிய ஒரு பின்னடைவு தான். இலங்கையிலுள்ள வடகிழக்கு தமிழர்களின் சமவுரிமை போராட்டம் சர்வதேச மயப்பட்டுள்ள அளவுக்கு மலையக தமிழர்களின் உரிமைப் போராட்டம் பிரசித்தமாகவில்லை.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கான அடிப்படை சர்வதேச சட்ட ஆணைகளான குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் (ஐஊஊPசு), மற்றும் பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் (ஐஊநுளுஊசு) என்பன பால், மொழி, மதம், அரசியல் அல்லது பிற வேறுபாடுகள், தேசிய அல்லது சமூக மூலம், உடைமை, பிறப்பு அல்லது பிற தகுதிகள் தொடர்பான வேறுபாடுகளை ஒழிப்பதை அடிப்படையாக கொண்டதாகும். இச்சட்டங்களுக்கூடாக மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கான முன்னகர்வுகள் இதுவரை முன்னேடுக்கப்படவில்லை. புதிய அரசியலமைப்பு வரைபில் பெரும்பான்மை அரசுகள் பிராந்திய அதிகாரப் பரவலை முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதில் ஒன்று தான் மாகாணசபை முறையை ஒழிப்பதாகும். அரசியலமைப்பின் 13 வது சட்டத்திருத்தத்துக்கு அமைவாக உருவாக்கப்பட்ட மாகாண சபை முறைமை சிறுபான்மை சமூகங்களை அடிப்படையாக கொண்டது. சிறுபான்மை மக்களை இலக்கு வைத்து அதிகாரங்களை பயன்படுத்தி அடக்கும் விதமாக தற்போது முன்மொழியப்பட்டுள்ள அரசியலமைப்பு வரைபிலும் காணி அதிகாரங்கள் தொடர்பாக மலையக மக்கள் வஞ்சிக்கப்படக் கூடிய வாய்ப்புகளே அதிகமாக உள்ளன.
இலங்கையின் அரசியலமைப்பு வரலாற்றில் டொனமூர் அரசியலமைப்பு முதற் கொண்டு மலையக மக்களுக்கான உரிமைகள் வலிதானவையாக ஆகின்றன. எனினும் நடைமுறையில் அது சாத்தியப்படவில்லை. டொனமூர் அரசியலமைப்பின் படி 21 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது. அச்சமயம் இலங்கையிலுள்ள இந்திய வம்சாவளி தமிழருக்கும் இரண்டு விதமான அடிப்படைகளில் வாக்குரிமை வழங்கப்பட்டது.
அதில் முதலாவது éர்வீக மூலம் ஊடாக வாக்குரிமையாகும். இரண்டாவது வாழுமிடத் தெரிவு (னுழஅiஉடைந ழக ஊhழiஉந) என்பதாகும். இதனடிப்படையில் வாழுமிடம் என்று நோக்கும் போது ஒரு பிரஜையின் நிரந்தர வசிப்பிடம் அல்லது அவரின் பிறப்புடன் தொடர்புடைய நாடாகும். அந்த வகையில் மலையக தமிழர்களின் பிறப்புரிமையும், வம்சாவளி உரிமையும் ஒருங்கே இலங்கையில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். எனினும் வாக்காளர்களாகவும், உழைப்பாளர்களாகவும் உள்ள இச்சமூகம் இன்றும் உடைமையாளர்களாக மாற்றமடையவில்லை. உடைமை எனப்படுவதில் நிலவுரிமை பிரதானமானது என்றவகையில் மலையக மக்களின் நிலவுரிமை மறுப்பானது அடிப்படை மனிதவுரிமை மீறலாகும்.
பெருந்தோட்ட மக்களுக்கான காணியுரிமை என்பது காணி சட்டங்களில் உள்ள வரம்புகளை மீறி எவ்விதத்திலும் சாத்தியப்படாது. அரசியலமைப்பு மாற்றம் ஒன்று முன்வைக்கப்படும் சந்தர்ப்பத்தில் சிறுபான்மை மலையக மக்களின் சார்பாக காணி சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வரப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
1935 ஆம் ஆண்டின் (19) ஆவது இலக்க காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் (டுயனெ னுநஎநடழிஅநவெ ழுசனiயெnஉந) அரச காணியொன்றில் தங்கி வாழ்வதற்கான அனுமதி பின்வரும் சட்ட அனுமதிகளின் மூலம் மாத்திரமே வழங்கப்படுகின்றது.
i. கட்டாயமாக ஏழை விவசாயியாக இருத்தல்.
ii. வருடாந்த மொத்த குடும்ப வருமானம் ரூ. 7500 ஐ கொண்டிருத்தல். அந்த எல்லையை கடக்காதிருத்தல்.
iii. வேறு எவ்விதமான காணி உரிமமும் பெற்றவராக இல்லாதிருத்தல்.
iஎ. அரச உத்தியோகத்தர் ஒருவருக்கு காணி வழங்குவதாயின் அவரின் குடும்பம் வருடாந்;த மொத்த வருமானம் ரூ. 500 000 ஐ கடக்காதிருத்தல்.
மேற்குறிப்பிட்ட பெறுமானங்களுக்கு அச்சட்டம் கொண்டுவரப்பட்ட காலப்பகுதியில் உள்ள மதிப்பீடு இன்று இல்லை. எனினும் இன்று வரை இச்சட்டங்களே நடைமுறையில் உள்ளன. இதனை மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் மலையக மக்களையும், ஏனைய சிறுபான்மை இனங்களையும் கருத்திற் கொள்ள வேண்டுமென்பதால் சமயோசிதமாக இவ்வாறான விடயங்களில் அரசுகள் கைவைப்பதில்லை.
காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் நியதிச்சட்டங்களின் பிரகாரம் (டுயனெ சுநகழசஅ ஊழஅஅளைளழைn) 1975 ஆம் ஆண்டின், 39 ஆம் இலக்கச் சட்டமானது காணி பகிர்ந்தளிப்பதற்கான தகைமைகளை வரையரை செய்கின்றது.
i. பிரிவு 22 இன் பிரகாரம் காணி ஒன்றை விற்பதற்கோ உரிமை மாற்றம் செய்வதற்கோ நபரொருவருக்கு அதிகாரம் உள்ளது. மேலும் அந்நபர் காணி அற்றவராக இருக்க வேண்டும்.
ii. காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவினால் (டுசுஊ) பெருந்தோட்ட கம்பனிகளுக்கு நீண்டகால குத்தகை அடிப்படையில் கொடுக்கப்பட்ட காணியை உப குத்தகைக்கோ, உரிமை மாற்றவோ ஒப்பந்த ரீதியாக முடியாது.
மேலும் காணி சீர்த்திருத்த ஆணைக்குழுவின் சட்டத்தின் படி காணியை இலவசமாகவோ நன்கொடையாகவோ கொடுப்பதற்கு அனுமதி இல்லை. கடந்த அரசாங்கத்தின் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் மூலம் அமைக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்களுக்கு இதுவரை காணியுறுதி கொடுக்கப்படாமைக்கு இச்சட்டச் சிக்கல்களே காரணம்.
அதேப்போ
அதேப்போல் காணி அபிவிருத்தி கட்டளை சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழை விவசாயி என்ற பதம் மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை எவ்வித்திலும் பிரதிபலிக்காது. அதேப்போல் ஏழை விவசாயி அல்லதோருக்கான எவ்வித ஏற்பாடுகளும் காணி சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இது மிகவும் துரதி~;டமானதாகும். 1947 இல் நடந்த குடியுரிமை பறிப்பு இன்றுவரை பல்வேறு வடிவங்களில் எமது சமூகத்தை பாதிப்பது தொடர்கின்றது.
இந்நாட்டில் மலையக மக்களுக்கான சமூக சீர்த்திருத்த சட்டங்கள் கொண்டு வரப்படல் வேண்டும். சிறப்பு சலுகைகளின் அடிப்படையிலேயே இவ்வாறான விடயங்கள் அணுகப்பட வேண்டும். ஏனைய சிறுபான்மை இனங்களுக்கு அவ்வாறான சிறப்பு சட்டங்கள் நாட்டில் நடைமுறையில் உள்ளன. ஆனால் மலையக தமிழருக்கு தொடர்ந்து அவை மறுக்கப்பட்டு வருகின்றன. தேசிய இனமொன்றாக மலையகச் சமூகத்தை நிலை நிறுத்துவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கும் இச்சந்தர்ப்பத்தில் அடிப்படை உரிமைகளை முதலில் உறுதிப்படுத்த வேண்டும். அதில் காணியுரிமையே பிரதானமானது. அதற்கான சட்டங்களை நோக்கி நாம் நகர வேண்டும்.
Comments
Post a Comment