Skip to main content

சமூக வலைத்தளங்களும் குற்றச்சிந்தனையும்

சமூக வலைத்தளங்களும் குற்றச்சிந்தனையும்


அருள்கார்க்கி




இலத்திரனியல் ,  அச்சு ஊடகங்களுக்கு இருந்த இடத்தை இன்று சமூக வலைத்தளங்கள் ஆக்கிரமித்து கொஞ்சம் கொஞ்சமாக உலக மக்களை உள்வாங்கிக்கொண்டு இருக்கின்றன. இன்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் சமூக வலைத்தளங்களின் ஆரம்ப கட்டம் சூடுபிடுக்கத் தொடங்கியது. இருபத்தொராம் Áற்றாண்டின் 2018 ஆம் ஆண்டு இதன் அசுர வளர்ச்சியை கண்டு பிரமித்து நிற்கின்றோம். காரணம் அன்மையில் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலைக்கு பெரும்பாலான காரணமாக சமூக வலைத்தளங்களான முகப்புத்தகம் (Face book) , வட்ஸ் அப் (Whats app) , ஐ.எம்.ஒ (IMO) , வைபர் (Viber)   உள்ளட்டவைக்கு தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு தற்காலிக தடை விதித்தது. அதனைத்தொடர்ந்து வன்முறைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டன என பொலிஸ் திணைக்களம் அறிவித்தது. இதன் மூலம் வன்முறை ஒழுங்கமைப்புக்கும், முன்னெடுத்துச் செல்வதற்கும் இவை முக்கியமான காரணிகளாக இருந்துள்ளன. 


பொதுவாகவே சமூக வலைத்தளங்கள் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டு இவற்றின் அசுர வளர்ச்சியை தடுக்க நாடுகள் திணருவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சமூக வலைத்தளங்கள் மீது இன்றுள்ள இளைய தலைமுறை கொண்டுள்ள மோகம் ஆரோக்கியமானது அல்ல. பத்திரிகைகள் வாசித்தல், வானொலி கேட்டல், புத்தாக்குணர் செயற்பாடுகள், சமூகதுடனான இணைப்பு, சந்திப்புகள் நடாத்துதல், பயனுள்ள பொழுது போக்குகள் முதலிய அனைத்தையும் புறந்தள்ளி சிறிது நேரம் கிடைத்தாலும் இணையத்தில் மூழ்கும் நிலைமையே தொடர்கின்றது.


உலக வரலாற்றில் இடம்பெற்ற மாபெரும் கண்டுபிடிப்புக்களும், புரட்சிகளும் இளைஞர்களாலேயே சாத்தியமாகியிருக்கின்றன. இன்றுள்ள நுகர்வுக் கலாசாரமும் வர்த்தக சந்தையும், ஆதிக்கச் சக்திகள் தீர்மானிக்கும் விதத்தில் தான் நடைபெறவேண்டும் என்பது அவர்களின் ஆக்கிரமிப்புச் சிந்தனை. அதற்கு உலக இளைஞர் பட்டாளத்தை அடிமையாக்குவதற்கு அவர்கள் எடுத்த ஆயுதமே சமூக வலைத்தளங்கள். சுருக்கமாக சொல்லப் போனால் உலக இளைஞர்களை, அவர்களின் சிந்தனையை , நடத்தையை வேவு பார்த்து அடக்கியாளுகின்றனர். 


அமெரிக்காவைத் தளமாகக் கொண்டு இயங்கும் முகப்புத்தகத்தின் நிறுவுனர் மார்க் ஸக்கர்பேர்க் (Marks zenberg) ஒரு இளைஞர். இதனை அவர் வடிவமைத்தவுடன் மனித நாகரீகத்தின் கண்டுபிடிப்புக்களை எல்லாம் ஒரே நாவலில் கடந்து விட்டதைப் போல அமெரிக்க புலனாய்வுத்துறை பெருமிதம் கொண்டது. இதற்கு காரணம் உலகில் நடக்கும் அனைத்து செயற்பாடுகளையும் வேவு பார்க்கும் முகவர் அமைப்புக்கள் அமெரிக்க புலனாய்வுத்துறை (CIA) வசம் உள்ளன. விக்கிலீக்ஸ், மற்றும் பனாமா பேப்பர்ஸ் ஆவணக்கசிவுகள் மூலம் உலகு சற்று விழித்துக்கொண்டது. காரணம் உலகிலுள்ள அனைத்து தொலைபேசி உரையாடல்கள், இணைய பரிமாற்றங்கள், இரகசிய வங்கிக் கணக்குகள், என அனைத்தும் அமெரிக்காவால் வேவு பார்க்கப்பட்டது எனும் உண்மை வெளிவந்நது. எனினும் அதனை தடுப்பது அசாத்தியமானதால் நவீன கொத்தடிமை நிலைக்கு சமூகங்கள் ஆட்பட்டிருக்கின்றது. 

அமெரிக்கா புலனாய்வுத் துறையினால் நேரடியாக முன்னெடுக்கப்படும் இதுபோன்ற வேவுபார்த்தல் , தொலைபேசி ஒட்டுக்கேட்டல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்பவே உலக இளைஞர்கள் சிந்திக்க வேண்டும்.

இதற்கு மேலதிகமாக உலக மக்களின் மன உணர்வுகளையும், அவர்களின் விருப்பு வெறுப்புக்களையும் தொட்டு பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டதே முகப்புத்தகம். இதனை உணர்ந்த நாடுகள் வரிசையில் சீனா, சில முஸ்லீம் நாடுகள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

கண்டி கலவரமும் அமெரிக்காவும்

அண்மையில் கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற கலவரம் நாம் அறிந்ததே. இதன் பிண்ணனியில் இனவாத சக்திகள் தான் இருக்கின்றனர் என அரசு பிரச்சாரம் செய்கின்றது. மக்களும் அதனையே ஆமோதிக்கின்றனர். இலங்கை அரசியலுடன் ஒப்பிட்டு வரலாற்று ஞாபகங்களை மீட்டிப்பார்த்து அது அவ்வாறே என நம்புகின்றனர். எனினும் இச்சம்பவத்தினை 
தொடர்ந்து சமூக வலைத்தளங்களின் செயற்பாடுகளை அரசு முடக்குகின்றது. அதற்கான காரணமாக இனவாதச் செயற்பாடுகளை நாட்டினுள் ஒழுங்கு அமைப்பதற்கு இவை உறுதுணையாக இருப்பதாகவும், முழு நாட்டிற்கும் இவை பரவாமல் இருப்பதற்கும் சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் சாத்தியமாக்கலாம் என அரசு நம்புகின்றது. இந்த படிப்பினையை அரசு பெற்றுக்கொள்வதற்கு ஒரு கலவரம் முதலீடுச் 
செய்யப்பட்டிருக்கின்றது. இதிலுள்ள அர்த்தம் என்னவென்றால், சமூக வலைத்தளங்களால் இதுவரை ஏற்ப்பட்ட சீரழிவுகள் அனைத்தும் பெருமதியற்றவை போலும், கண்டி கலவரம் மட்டுமே சமூக வலைத்தளங்களால் ஏற்ப்பட்ட நட்டம் போலும் அரசு சிந்திக்கின்றது. இதன் நேரடியான பலாபலன்களை இலங்கை என்றவகையில் நாம் அனுபவித்தாலும் இதன் மறுபுறம் நாம் அறியாத ஒன்று.

அதாவது வல்லரசுகளின் வியாபாரச் சிந்தனைக்கு நாம் பலிகடாக்களாக ஆக்கப்பட்டிருக்கும் நிலைமை சற்று பாரÀரமானது. அமெரிக்காவின் வெளிநாட்டு கொள்கைக்கு நாம் தீணி போடுகின்றோம். அவர்களின் வியாபாரத்தை விஸ்தரிக்க எமது தேவைகளை வெளிப்படுத்கின்றோம். அதன் மூலம் அவர்கள் அரசியல் வியாபாரம் செய்கின்றனர். இதற்கு அரசும் துணைபோகும் ஒரு செயற்பாடே அண்மைய அனுபவம் எடுத்துக்காட்டுகின்றது. 
மக்களிடம்; இருந்து அவர்களின் உரையாடல் மூலம் தேவைகளை இணம் கண்டு வியாபாரம் செய்கிறது முகப்புத்தகம்.



மலையக இளைஞனும் அமெரிக்காவும்

மலையகத்தைப் பொருத்தவரையில் இன்று ஸ்மார்ட் போனும், டிஸ் டிவியும் இல்லாத வீடுகளே இல்லை எனக் கூறலாம். அந்தளவுக்கு இணையத்தின் கோரப்பிடிக்குள் மலையகம் ஆட்பட்டுள்ளது. பெருவாரியான Àரதிஸ்டங்களுக்கு அப்பாற்பட்டு இணையத்தால் 
இழந்தவைகள் என பட்டியற்படுத்தினால் அது நீண்டு செல்லுமே அன்றி குறையாது. குறிப்பாக வாசிப்பு, தேடல் என்பன முதற்கட்டமாக மலையக இளைஞர்களிடம் இருந்து அப்பால் சென்றுள்ளன. அடுத்ததாக புத்தகங்கள், கண்டுப்பிடுப்புக்கான நேரம் முகப்புத்தகத்தில் முழ்கடிக்கப்பட்டு உள்ளது. சமூகத்துடனான ஒன்றிப்பு , கலந்துரையாடல்கள் என்பன இணையம் மூலம் இல்லாமல் போயுள்ளன. கலைக் கலாசார விடயங்களும் இதற்கு விதி 
விலக்கல்ல. இவ்வாறு பட்டியலிட்டுக் கொண்டே போகலாம். அதிலும் குறிப்பாக சமூக அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுப்போர் முகப்புத்தகத்தில் பதிவிட்டுவிட்டு தம் வேலையை 
பார்க்கின்றனர். அவர்களின் பங்கிற்கு குரல் கொடுத்தாயிற்று. இந்தக் குரல்கொடுப்பு எவ்வளவு பெருமதியானது என்பது அமெரிக்காவுக்கு தான் வெளிச்சம்.

உலக இளைஞர்களின் சிந்தனையைக் கட்டிப்போடும் அமெரிக்காவின் ஆதிக்கச் சிந்தனைக்கு மலையக இளைஞனும் விதிவிலக்கல்ல. அவர்களின் நோக்கம் வியாபாரம், மற்றும் நவீன 
“சிந்தனை அடக்குமுறை” இவர்கள் இதனைச் செய்வதற்கு நாமே பணத்தையும் நேரத்தையும் மூதலீடுச் செய்து அவர்களுக்கு உதவுகின்றோம் என்பதுதான் அடிக்கோடிடப்பட வேண்டிய 
நகைப்பு.

பேஸ்புக் காதல், ஏமாற்றி மோசடி செய்தல் மற்றும் பல குற்றச்செயல்களுக்கு சமூக வலைத்தளங்கள் காரணமாக இருக்கின்றன. தமது முகத்தை மறைத்துக் கொண்டு 
போலியான கணக்குகள் மூலம் மோசடிகள் செய்வோரை அண்மைக்காலமாக காணமுடிகின்றது. இதற்கெனவே பிரத்தியோகமாக (ஊலடிநச உசiஅந ரnவை) இணைய 
குற்றப்புலனாய்வு பிரிவென்று ஒன்று பொலிஸ் திணைகளத்தில் இயங்கி வருகின்றது. குற்றம் புரிவதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கும் போது அரசுக்கு நெருக்கடியும் செலவும் ஏற்ப்படும். 


அதன்போது அரசு எவ்வாறு இதனைக் கையாளப் போகின்றது என்பதை கணிக்க முடியாதுள்ளது. இறுதியாக சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது விமர்சனத்துக்கு 
அப்பாற்பட்டு அடிப்படை உரிமை ஒன்றா? என்ற வினா எழுகின்றது.
     

Comments

Popular posts from this blog

Prisoners in Sri Lanka and Their Struggles for Rights

Prisoners in Sri Lanka and Their Struggles for Rights. By Arul Karki A  Abstract This research  focuses on addressing the issues and rights of prisoners in Sri Lanka. It further examines other challenges comprising the penal framework in the country including issues like; recurrent trend of overcrowding, resource constraints, high levels of poverty, poor standards of minimum housing, health and other rehabilitation services. Additionally, it seeks to understand the legal regime on prisoners’ rights in Sri Lanka and whether or not these rights exist in practice. In addressing some of the key areas of the plight of prisoners in Sri Lanka, this article embarks on trying to underscore the feel for reforms and improvements in the country’s penal system. Introduction:D The prison system in Sri Lanka has for a long time had undesirable challenges which have negative consequences on the patterns of life of those serving sentences. Just like any other country’s prisoners, incarcerated ...

Impact of Climate Change on Horton Plains National Park in Sri Lanka

Impact of Climate Change on Horton Plains National Park in Sri Lanka. By Arul karki   Introduction: Horton Plains National Park, located in the central highlands of Sri Lanka, is a biodiversity hotspot renowned for its unique ecosystems and diverse wildlife. The park encompasses a range of habitats, from montane cloud forests to grasslands, making it a critical conservation area. However, like many regions around the world, Horton Plains is not immune to the effects of climate change. This article will delve into the impacts of climate change on Horton Plains National Park in Sri Lanka. 1. Changes in Temperature: One of the most evident impacts of climate change on Horton Plains is the rising temperatures. Studies have shown that temperatures in the region have been steadily increasing over the past few decades, leading to shifts in the park's ecosystems. Higher temperatures can disrupt the delicate balance of flora and fauna in the park, affecting everything from plant growth to a...

A Memorable Experience at the Bandarawela Archimedes International School Innovation Expo 2025 By Arulkarki

A Memorable Experience at the Bandarawela Archimedes International School Innovation Expo 2025 By Arulkarki          In my recent visit to the Bandarawela Archimedes International School, I had the distinct honor of being a special guest at the Innovation Expo 2025. This event, dedicated to fostering creativity and showcasing innovative projects developed by students, was not only a platform for young minds to express their ideas but also a celebration of ingenuity and academic excellence. Upon arriving at the school, I was immediately struck by the vibrant energy that permeated the grounds. The atmosphere buzzed with excitement as students prepared their exhibits and presentations. It was clear that significant effort had gone into planning and executing this event, and I was eager to see the fruits of their labor. As I toured the various displays, I was genuinely impressed by the diversity of projects on offer. Students from different age groups presented thei...